தமிழ் சினிமாவில் தற்போது இயக்குனராக என்ட்ரி கொடுத்துள்ளார் சஞ்சய் ஜேசன்.
இவருடைய முதல் திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படம் குறித்து 2023-ல் அறிவிப்பு வெளிவந்தது. அதன்பின் சில காரணங்களுக்காக படப்பிடிப்பு துவங்காமல் இருந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஹீரோ சந்தீப் கிஷன் என்று அறிவிப்பு வெளியானது.
படத்தின் அறிவிப்பு வெளிவந்த பிறகும் படப்பிடிப்பு துவங்காமல் இருந்ததால் சஞ்சய் மனமுடைந்துவிட்டர் எனக் கூறப்படுகிறது.
அப்போது வேறு தயாரிப்பு நிறுவனத்தை அணுகலாமா என்று சுரேஷ் சந்திராவிடம் கேட்டுள்ளார். அவர் சஞ்சயின் நலம் விரும்பி மட்டுமின்றி அஜித்தின் மேலாளர்.
அப்போது அருகில் இருந்த அஜித் சஞ்சயிடம் படத்தில் எந்த பிரச்சனை இருந்தாலும் தன்னிடம் கூற கேட்டிருக்கிறார்.
மேலும், வேறு நல்ல தயாரிப்பு நிறுவனத்தை பரிந்துரைப்பதாக கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.