Parliament Winter Session: மக்களவையில் 3 வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டன
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்; குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்; குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
மக்களவையில் வேளாண் சட்டங்கள் திரும்ப பெற்றவுடன், உடனடியாக மாநிலங்களையிலும் மசோதாவை தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
எந்தவித விவாதமின்றி அவசரமாக மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
முன்னதாக, கூட்டத்தொடர் நடப்பதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, "நடப்பு கூட்டத்தொடர் மிக முக்கியமானது, அவையை நல்ல முறையில் நடத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்க அரசு தயார் " என்று தெரிவித்தார்.
Hollow words, Mr Prime Minister.
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) November 29, 2021
You ran away from discussing #Pegasus & are responsible for disrupting full Monsoon Session. In Sept 2020 your Govt broke every rule & bulldozed #FarmLaws
The problem is no one in your Cabinet will tell you that #Parliament is not #MannKiBaat https://t.co/p0qdbVNbJq
முன்னதாக, அனைத்து வகையான வேளாண் பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையில் முன்பு, காங்கிரஸ் கட்சியின் இடைகாலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Delhi | Congress Interim President Sonia Gandhi leads party's protest demanding repeal of Centre's three farm laws#WinterSession pic.twitter.com/rTTH0qklae
— ANI (@ANI) November 29, 2021
மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி, கேள்வி நேரத்தை ரத்து செய்யும் தீர்மானத்தை காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்திரி கொடுத்தார். நாடாளுமன்றம் அவைத் தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, நண்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்