காங்கிரஸூக்கு அடி மேல் அடி! கூட்டணியே கிடையாது.. கறார் காட்டிய மம்தா
Mamata banerjee : "மேற்கு வங்கத்தில் காங்கிரசுக்கு எதுவும் இல்லை. எனவே மாநிலத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காங்கிரஸ் கட்சியுடன்எந்தப் புரிதலும் இல்லாமல், 2026 ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடம் மம்தா தெரிவித்தார்.
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல்:
மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு நடைப்பெற உள்ளது, இதற்காக ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் நான்காவது முறையாக ஆட்சி பொறுப்பில் அமர வேண்டும் என்கிற நோக்கில் பயணித்து வருகிறது, மேலும் பாஜக எப்படியாவது மம்தாவின் ஆட்சியை முறியடிக்க வேண்டும் என்று தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பாஜக 27 ஆண்டுகளுக்கு டெல்லியில் ஆட்சியை பிடித்தது, கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை இழந்தது. டெல்லி தேர்தல் தோல்விக்கு இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எதிர்த்து போட்டியிட்டன, இதன் காரணமாகவே ஆம் ஆத்மி ஆட்சியை இழக்க நேரிட்டதாக இந்தியா கூட்டணியை கட்சிகள் விமர்சனத்தை முன் வைத்தன.
மம்தாவுடன் கூட்டணி:
இந்த நிலையில் அடுத்ததாக மேற்கு வங்கத்தில் சட்ட மன்ற தேர்தல் நடைப்பெறவுள்ளது, இந்த தேர்தலில் காங்கிரஸ் - திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணி வைக்க வேண்டும் எனவும் மம்தா காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சேனா யுபிடி தலைவர் சஞ்சய் ராவத் கூறினார். இந்த நிலையில் மம்தா பானார்ஜி சட்ட மன்ற தேர்தல் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று பேசியுள்ளார்.
மம்தா பேச்சு:
"மேற்கு வங்கத்தில் காங்கிரசுக்கு எதுவும் இல்லை. எனவே மாநிலத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும். 2026 ஆம் ஆண்டில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்று நான்காவது முறையாக நாங்கள் மீண்டும் அரசாங்கத்தை அமைப்போம்," என்று முதலமைச்சர் கூட்டத்தில் கூறினார் என்று மாநில அமைச்சரவையின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறினார்.
இருப்பினும், சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளுக்கு காங்கிரஸை மம்தா வெளிப்படையாகக் குற்றம் சாட்டியதாக கூறப்பட்டுள்ளது. டெல்லி சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 70 இடங்களில் 48 இடங்களை பாஜக வென்று ஆட்சிக்கு வந்தது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

