ஜனநாயகனுக்கு முன்பு ரிலீசாகும் விஜய்யின் மற்றொரு படம்

Published by: ABP NADU
Image Source: twitter

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய்.

Image Source: twitter

விஜய் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய பிறகு நடிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

Image Source: twitter

அவரது நடிப்பில் கடைசித் திரைப்படமாக ஜனநாயகன் உருவாகி வருகிறது. இந்த படம் எப்போது ரிலீசாகும் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Image Source: twitter

இந்நிலையில், விஜய் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். ஜான் மகேந்திரன் இயக்கிய இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருப்பார்.

Image Source: Pinterest

இது முழுக்க முழுக்க துள்ளலான நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாகும். இப்போதும் ரசிகர்கள் மத்தியில் ஃபேவரைட் படமாக திகழ்கிறது.

Image Source: IMDB

இந்த படம் ரீரிலீசாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சற்று முன் அறிவித்திருந்த நிலையில் கோடை விருந்தாக மீண்டும் ரீரிலீஸ் செய்யப்பட உள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது.

Image Source: Pinterest

இந்த படத்தின் ரீரிலீஸ் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Image Source: Pinterest