"வரலாற்று சாதனை" கிட்னி பிரச்னைக்கு பதஞ்சலியின் மருந்து.. சர்வதேச அளவில் அங்கீகாரம்!
பதஞ்சலி விஞ்ஞானிகள், தங்களின் ஆராய்ச்சி மூலம் ஆயுர்வேத சிறுநீரக மருந்தான ரெனோகிரிட் என்ற மருந்தை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம், இவர்கள் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளனர்.

ஆயுர்வேத பொருட்கள் மற்றும் இயற்கை மருத்துவத்தை ஊக்குவிக்கும் நிறுவனம் பதஞ்சலி. இந்த நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், தங்களின் ஆராய்ச்சி மூலம் ஆயுர்வேத சிறுநீரக மருந்தான ரெனோகிரிட் என்ற மருந்தை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம், இவர்கள் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளனர்.
கிட்னி பிரச்னைக்கு பதஞ்சலியின் மருந்து:
இதுகுறித்து பதஞ்சலி நிறுவனம் தரப்பில் கூறுகையில், "இந்த மருந்து குறித்த ஆராய்ச்சி நேச்சர் போர்ட்ஃபோலியோவின் புகழ்பெற்ற ஆராய்ச்சி இதழான 'Scientific Reports' இல் வெளியிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் சிறந்த 100 ஆராய்ச்சிக் கட்டுரைகளில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.
சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் என்ற ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட ரெனோகிரிட் ஆராய்ச்சி கட்டுரை இதுவரை 2,568 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆயுர்வேத மருந்துகள், நோய்களுக்கு பயனுள்ள சிகிச்சைகள் அளிப்பது மட்டுமல்ல, விஞ்ஞானிகளிடையே ஆர்வத்தைத் தூண்டும் விஷயமாகவும் மாறி வருகின்றன என்பதை இது காட்டுகிறது. சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸின் இம்பாக்ட் ஃபேக்டர் 3.8 ஆக உள்ளது. உலகில் அதிகம் படிக்கப்படும் 5ஆவது இதழ் இது.
சர்வதேச அளவில் அங்கீகாரம்:
ஆயுர்வேத மருந்துகள், நோய்களைக் குணப்படுத்துவதில் வெற்றிகரமானது என்பது நிரூபணமாகி வருவது மட்டுமல்லாமல், மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மருந்து, எந்தப் பக்க விளைவுகளும் இல்லாமல் மிகப்பெரிய நோய்களைக் கூட எவ்வாறு குணப்படுத்த முடியும் என்பதைப் பற்றி விஞ்ஞானிகள் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த மருந்து புற்றுநோய் சிகிச்சை மருந்தான சிஸ்ப்ளேட்டினால் சேதமடைந்த சிறுநீரகங்களை சரிசெய்வது மட்டுமல்லாமல், சிறுநீரக செல்கள் மீதான ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் குறைக்கிறது" என தெரிவித்துள்ளது.
பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா, இதுகுறித்து குறிப்பிடுகையில், "ஆயுர்வேத மருந்துகள் அறிவியல் பூர்வமாக அங்கீகாரம் பெறுவதில் ரெனோக்ரிட்டின் வெற்றி ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். பண்டைய இந்திய அறிவியலை நவீன நுட்பங்களுடன் சோதிக்கும்போது, அற்புதமான முடிவுகள் முன்னுக்கு வருகின்றன" என்றார்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை அல்ல. மருத்துவம் அல்லது பொது சுகாதார காரணங்களுக்காக, சிகிச்சைக்காக நீங்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனத்தின் தயாரிப்பைப் பயன்படுத்தினால், உங்கள் மருத்துவர் அல்லது பிற தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநர்களின் ஆலோசனையைப் பெறவும்)
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

