மேலும் அறிய

விமான நிலையத்தில் முதல் டிரைவ்-இன் திரையரங்கம்: ஐதராபாத்தில் அசத்தல் அறிமுகம்!

தெலங்கானாவின் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விரைவில் நாட்டிலேயே முதன்முறையாக டிரைவ்-இன் திரையரங்கம் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலங்கானாவின் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விரைவில் நாட்டிலேயே முதன்முறையாக 
 டிரைவ்-இன் திரையரங்கம் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை அடுத்து தலைநகர் ஐதராபாத்தில் இது முற்றிலும் புதிய திரைப்பட கலாச்சாரத்தை அறிமுகப்படுத்துகிறது.

நகரின் பொழுதுபோக்கு தேர்வுகள் இந்த சேர்க்கை மூலம் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இதை அடுத்து திரைப்பட ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான திரைப்படங்களை தங்கள் சொந்த வாகனங்களில் அமர்ந்தபடியே பார்க்கலாம்.

ஷம்ஷாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் முதல் டிரைவ்-இன் திரையரங்கம் அமைய உள்ளது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த திரையரங்கம் நிரந்தரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், நகரில் உள்ள ஸ்டார்லிட் சினிமாஸ் போன்ற பிற நிறுவனங்களும் வெளியில் ஆங்காங்கே திரைப்படக் காட்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். விமான நிலைய திரையரங்கத்தால் தனி திரையரங்குகள் நிலை என்னவாகும் மற்ற கேளிக்கை இடங்கள் இதனால் பாதிக்கப்படுமா என்பது உள்ளூர் வர்த்தகத்தினரின் கேள்வியாக உள்ளது.

டிஜிட்டல் மற்றும் மின்னணுத்துறையில் தன்னை மேம்படுத்தி வரும் ஐதராபாத்

முன்னதாக, ஐதராபாத்  மெட்ரோ ரயில் நிறுவனம் வாட்ஸ்அப்பில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் இந்தியாவில் முழு டிஜிட்டல் பேமெண்ட் வசதியுடன் கூடிய வாட்ஸ்அப் இ-டிக்கெட் வசதியை அறிமுகப்படுத்திய முதல் மெட்ரோ ரயில் என்ற பெருமை ஐதராபாத்திற்கு உண்டு.

Billeasy டிஜிட்டல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து ,இந்த வசதியை மெட்ரோ நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய கட்டண வசதி குறித்து பேசிய எல்&டி மெட்ரோ ரெயில் (ஹைதராபாத்) லிமிடெட்டின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான கேவிபி ரெட்டி, “ஹைதராபாத் மெட்ரோ ரெயில் டிஜிட்டல்மயமாக்கலின் சக்தியை நம்புகிறது. டிஜிட்டல் இந்தியா பணிக்கு ஏற்ப, முழு டிஜிட்டல் கட்டண நுழைவாயிலுடன் இந்தியாவின் முதல் மெட்ரோ வாட்ஸ்அப் eTicketing வசதியை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் ”என்றார்.

ஒரு வேளை நீங்கள் ஐதராபாத்திற்கு செல்ல விருப்பமுள்ளவராக இருந்தாலோ அல்லது அங்கு பணிபுரிபவர்களாக இருந்தாலோ இந்த வசதி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் . எப்படி வாட்ஸ்அப்பினை பயன்படுத்தி மெட்ரோ டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

  • முதலில் உங்கள் வாட்ஸ்அப்பில் +91 8341146468  என்ற எண்ணை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.

  • பின்னர் அந்த எண்ணின் சாட் பக்கத்தை திறந்து , ‘ஹாய்’ என செய்தியை அனுப்ப வேண்டும். அல்லது மெட்ரோ நிலையங்களில் காட்டப்படும் QR குறியீட்டை ஸ்கேன் செயவதன் மூலம் நேரடியாக நீங்க முன்பதிவு செய்யும் பக்கத்திற்கு அழைத்துச்செல்லப்படுவீர்கள்.

  • இ-டிக்கெட் முன்பதிவு இணைப்புடன், ஐந்து நிமிடங்களுக்கு செல்லுபடியாகும் OTP (ஒரு முறை கடவுச்சொல்) பெறுவீர்கள்

  • இ-டிக்கெட் கேட்வே இணையப் பக்கத்தைத் திறக்க,  அந்த டிக்கெட் முன்பதிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்

  • உங்கள் பயண வழியை தேர்வு செய்யவும். அதாவது எங்கிருந்து எங்கு செல்கிறீர்கள் என்பதை பதிவு செய்துக்கொள்ளுங்கள். மற்றும் பயண வகையை தேர்வு செய்யவும். அதாவது ஒரு வழியா , அல்லது திரும்பி மெட்ரோ சேவையைத்தான் பயன்படுத்தி , திரும்பி வருவீர்களா  (one-way or return) என்பதை குறிப்பிட்டுக்கொள்ளுங்கள்.

  • Google Pay, PhonePe, Paytm, Rupay டெபிட் கார்டு அல்லது வேறு ஏதேனும் கட்டண விருப்பத்தைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் வசதி உள்ளது. உங்களுக்கு பிடித்தமானவற்றை தேர்வு செய்துக்கொள்ளுங்கள்.

  • இப்போது உங்களுக்கு பதிவு செய்யப்பட்ட வாட்ஸ்அப் எண்ணில் மெட்ரோ இ-டிக்கெட்  இணைப்பு கிடைக்கும். ஒரு வேளை நீங்கள் QR மூலம் மின் கட்டணத்தை பெற பதிவு செய்திருந்தால் , பதிவிறக்கம் செய்யும் வசதியை பெறுவீர்கள்.

  • தானியங்கி கட்டண சேகரிப்பு (AFC) வாயிலில் QR இ-டிக்கெட்டை ப்ளாஷ் செய்து உங்கள் பயணத்தைத் தொடரலாம்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Election

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
TN Weather Report 28th: நீலகிரி, கோவை மக்களே உஷாரா இருங்க; 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
நீலகிரி, கோவை மக்களே உஷாரா இருங்க; 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
ADMK-BJP Vs TVK: அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு  - ஏற்பாரா விஜய்.?
அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு - ஏற்பாரா விஜய்.?
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி.,  வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி., வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Embed widget