மேலும் அறிய

Breaking LIVE: கட்சியின் பொறுப்புகளில் இருந்து சூர்யா சிவா 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட்-அண்ணாமலை அறிவிப்பு

Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

LIVE

Key Events
Breaking LIVE: கட்சியின் பொறுப்புகளில் இருந்து சூர்யா சிவா 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட்-அண்ணாமலை அறிவிப்பு

Background

தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 187வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 180 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.
 
பெட்ரோல், டீசல் விலை:
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.

இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.

இனி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையா..? 

 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 

2025 இலக்கு:

இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.

21:30 PM (IST)  •  24 Nov 2022

"பொறுப்புகளில் இருந்து சூர்யா சிவா சஸ்பெண்ட்"

பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து அக்கட்சியின் ஓபிசி பிரிவு பொதுச் செயலர் சூர்யா சிவாவை  மாநிலத் தலைவர் அண்ணாமலை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

19:09 PM (IST)  •  24 Nov 2022

யானைகள் பாதுகாப்பு- தென்னக ரயில்வேக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கஞ்சிக்கோடு - வளையாறு வழித்தடத்தில் இரவு நேரங்களில் ரயிலை 30 கி.மீ வேகத்திலேயே இயக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

16:38 PM (IST)  •  24 Nov 2022

தனியார் பள்ளிகளில் மத அரசியல் கூட்டங்களை நடத்தக்கூடாது - மெட்ரிக்குலேஷன் பள்ளி இயக்ககம்..

தனியார் பள்ளிகளில் மத அரசியல் கூட்டங்களை நடத்தக்கூடாது - மெட்ரிக்குலேஷன் பள்ளி இயக்ககம்..

12:43 PM (IST)  •  24 Nov 2022

தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா

எஸ் ஆர் எம் பல்கலை வளாகத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான தமிழ் பேராய விருதுகளை வழங்கினார் பாரிவேந்தர்

12:07 PM (IST)  •  24 Nov 2022

2001ம் ஆண்டு முதல் அரியர் வைத்திருக்கும் பொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத அனுமதி

2001 முதல் 2002ம் ஆண்டு முதல் அரியர் வைத்திருப்பவர்களுக்கு மீண்டும் தேர்வுகள் எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
PM Modi : ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
PM Modi : ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
Poisonous Gas: உலகின் மிகவும் ஆபத்தான விஷவாயு..! முதல் மூச்சுக்கே உயிர் இருக்காது, காரணம் என்ன?
Poisonous Gas: உலகின் மிகவும் ஆபத்தான விஷவாயு..! முதல் மூச்சுக்கே உயிர் இருக்காது, காரணம் என்ன?
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
Embed widget