Breaking News LIVE: 34 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை இருக்கும் - வானிலை மையம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE

Background
Breaking News LIVE: 34 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை இருக்கும் - வானிலை மையம்
தமிழ்நாட்டில் உள்ள 34 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) May 21, 2024
திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் அசைவ உணவு சமைக்க தடை - கோயில் நிர்வாகம் அறிவிப்பு
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் அசைவ உணவு சமைக்க தடை. உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் அசைவ உணவுகளை சமைக்க தடை விதித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
எடப்பாடியில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை
சேலத்தில் உள்ள எடப்பாடியில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வருகிறது.
மதுரையில் நாளை அரசு சித்திரை பொருட்காட்சி
மதுரையில் நாளை அரசு சித்திரை பொருட்காட்சி நடைபெற உள்ளது.
Breaking News LIVE: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது முன்னாள் மனைவி பீலா வெங்கடேஷ் புகார்
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது முன்னாள் மனைவி பீலா வெங்கடேஷ் புகார் அளித்தையடுத்து, 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

