Breaking News Tamil LIVE: அதிமுக அலுவலகத்திற்கு சீல் ஏன்? - காவல்துறை விளக்கம்
இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்..

Background
நிரம்பும் மேட்டூர் அணை - வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115 அடியை எட்டியுள்ள நிலையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியானது
குரூப் 1 தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அதிமுக அலுவலக சீல் வழக்கு ஒத்திவைப்பு
அதிமுக அலுவலகத்தை சீல் வைத்ததுதொடர்பாக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு
Breaking News Tamil LIVE: அதிமுக அலுவலகத்திற்கு சீல் ஏன்? - காவல்துறை விளக்கம்
அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது ஏன் என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததால் தான் சீல் வைக்கப்பட்டது என்றும், சீல் வைக்கப்பட்ட உத்தரவை ரத்து மேலும் பிரச்சனை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையின் தலையீடு இல்லாமல் போயிருந்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் - அரசு தரப்பு வழக்கறிஞர்
காவல்துறையின் தலையீடு இல்லாமல் போயிருந்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும். நாங்கள் அதை தடுத்தோம். பொதுமக்கள் யாருக்கும் இதில் காயம் ஏற்படவில்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் பதிலளித்தார்.

