போதைப்பொருள் வழக்கு.. போலீஸ் தனிப்படையினரிடம் சிக்கிய நடிகர் கிருஷ்ணா ரகசிய இடத்தில் விசாரணை
கிருஷ்ணா வீட்டில் இல்லாததால் போலீசார் அவருடைய குடும்பத்தினரிடம் சம்மனை கொடுத்துவிட்டு வந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

போதைப்பொருள் வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகர் கிருஷ்ணாவை போலீசார் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
ஸ்ரீகாந்த் கைது:
போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பிரசாத் என்கிற அதிமுக நிர்வாகி, நுங்கம்பாக்கத்தில் உள்ள பாரில் பிரச்சனை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், ஸ்ரீகாந்துக்காக பிரதீப் என்பவரிடம், பிரசாத் கொக்கேன் போதை மருந்தை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது போலீசார் விசாரணையில் நடிகர்கள் கிருஷ்ணா மற்றும் ஸ்ரீ காந்திற்கு போதைப்பொருள் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சென்னை நுங்கம்பாக்கம் போலீசில் கைது செய்து விசாரணை மேற்க்கொண்டனர். ஆனால் இந்த வழக்கில் நடிகர் கிருஷ்ணா தலைமறைவாகி இருந்தார்.
கிருஷ்ணா தலைமறைவு:
முன்னணி இயக்குனர் விஷ்ணுவர்தனின் உடன் பிறந்த சகோதரர் ஆவார் கிருஷ்ணா, ஏற்கனவே கிருஷ்ணாவை விசாரணைக்கு ஆஜராகும்படி, போலீசார் சம்மன் கொடுத்துள்ளனர். கிருஷ்ணா வீட்டில் இல்லாததால் போலீசார் அவருடைய குடும்பத்தினரிடம் சம்மனை கொடுத்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. நடிகர் கிருஷ்ணா கேரளாவில் படப்பிடிப்பில் இருந்ததாக கூறப்பட்டது, அவரது எண்ணுக்கு தொடர்புக்கொண்ட போது அவரது அலைப்பேசியானது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தலைமறைவாகி இருந்த அவரை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது.
பிடிப்பட்ட நடிகர் கிருஷ்ணா:
தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் அளித்த தகவலின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த நடிகர் கிருஷ்ணாவை சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிருஷ்ணாவிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. அவர் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம் என்றும் இன்னும் யார் யார் இந்த போதைப்பொருள் வழக்கில் சிக்குவார்கள் என்று கிருஷ்ணா கூறும் தகவலின் பொறுத்தே அமையும்.
ஸ்ரீகாந்த் வாக்குமூலம்:
அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாந்த் கைது ஆனதுக்கு முன்புதான் அவரிடம் இருந்து 250 கிராம் கொக்கேன் பாக்கெட்டை வாங்கினேன். அதை வைத்து கடந்த சனிக்கிழமை இரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில், கொக்கேன் பார்ட்டி நடத்தினேன். போதை மருந்து தொடர்பாக பிரசாத்தை மட்டுமே எனக்குத் தெரியும். அவர் என்னை வைத்து படம் ஒன்றை தயாரித்து வருகிறார்.
எனக்கு அவர் தர வேண்டிய ரூபாய் பத்து லட்சம் பணத்தை கேட்டபோது, கொக்கேன் கொடுத்து பழக வைத்தார். நான் பணம் கேட்கும் போதெல்லாம், கொக்கேன் கொடுத்து பழக்கத்தை அதிகப்படுத்தியதும் அவர்தான். என்று தனது வாக்குமூலத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்






















