எங்களோடு War செய்யும் அளவுக்கு அதிமுக IT wing-க்கு தகுதியில்லை - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா
அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையிலும் உறுப்பினர் சேர்க்கை திட்டம் இருக்கும் - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா

ஓரணியில் தமிழ்நாடு செயலி தொடக்கம்
ஓரணியில் தமிழ்நாடு செயலி- அறிமுகம் மற்றும் திமுக ஐ.டி.விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி முகாம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ;
தமிழகத்தில் இருக்கின்ற கடைக்கோடி மக்களும் அனைத்து தரப்பு மக்களும் பரவலாக்க வளர்ச்சி கண்டு கொண்டு இருக்கும் இந்த வேலையில் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சியில் அனைத்தும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.
டீக்கடை முதல் ட்விட்டர் வரை
நூற்றாண்டு காலம் கடந்து செல்ல இருக்கும் இந்த இயக்கத்தை புதுப்பிக்க நினைக்கிறார் தமிழக முதலமைச்சர். டீக்கடை முதல் ட்விட்டர் வரை இந்த இயக்கத்தின் பிரச்சாரம் பயணித்து இருக்கிறது. இந்த பயணம் வழியாக தமிழ் இனத்திற்காக , தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக , தமிழ் மக்களின் எதிர்காலத்திற்காக , தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஓரணியில் திரண்டு தமிழ்நாட்டிற்காக நிற்க விரும்புகிறீர்களா என்ற கேள்வியே இந்த உறுப்பினர் முகாமில் மக்களிடையே சேர்க்க உள்ளோம்.
234 திமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளும் 27 ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் மிக பிரம்மாண்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் இருக்கக் கூடிய வாக்குச்சாவடிகள் , பாக முகவர்கள் ஓரணியில் தமிழ்நாடு செயலி குறித்த பயிற்சி கொடுக்கப்படும்
திமுக IT Wing வுடன் வார் செய்ய அதிமுக IT wing தகுதியில்லை
உறுப்பினர் சேர்க்கை மட்டும் அல்லாமல் திமுக அரசின் திட்டங்கள் சரியான அளவில் சென்றடைந்துள்ளதா ?
அரசின் திட்டங்கள் மக்களிடம் கொண்டு செல்லும் வகையிலும் உறுப்பினர் சேர்க்கை திட்டம் இருக்கும்.
இனத்தை எதிர்த்தவரும் எதிரிகளையும் இனத்திலேயே இருந்து கொண்டு துரோகம் செய்யும் துரோகிகளையும் முறியடிக்கும் பயணத்தில் திமுக இறங்கியுள்ளது. ஒன்றிய அரசு தமிழகத்திற்கு எதிராக செயல்படுவதை பற்றி பட்டி தொட்டி எல்லாம் தெரிவிக்க உள்ளோம் .ஒன்றிய அரசு போக்கை வெளிச்சம் போட்டு மக்களுக்கு காட்டப் போகிறோம். திமுக தகவல் தொழில்நுட்ப அணியுடன் வார் செய்ய அதிமுக ஐ.டி.விங் தகுதி இல்லை என தெரிவித்தார்





















