Breaking LIVE :தேசியக்கொடியை ஏற்றினார் முதலமைச்சர் முக ஸ்டாலின்..!
Breaking News LIVE Updates: இன்றைய நாளின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்...

Background
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34% ஆக உயர்வு..!
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% ல் இருந்து 34 % ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேசியக்கொடியை ஏற்றினார் முதலமைச்சர் முக ஸ்டாலின்..!
சுதந்திர தினத்தையொட்டி கோட்டை கொத்தளத்தில் இந்திய தேசியக்கொடியை முதலமைச்சர் முக ஸ்டாலின் ஏற்றினார்.
76 வது சுதந்திர தின விழா : திருவண்ணாமலை ரமாண ஆசிரமத்தில் கொடியேற்றிய இசைஞானி இளையராஜா
76 ஆவது இந்திய நாட்டின் சுதந்திர தின விழாவையொட்டி மாநிலங்களவை நியமன உறுப்பினரும் இசைஞானி இளையராஜா இன்று திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ரமணாஸ்ரமத்தில் இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் அங்கு இருந்த கொடி ஏற்றிய இளையராஜா பாரதியாரின் பாருக்குள்ளே நல்ல நாடு என்ற பாடலை பாடி தேசப்பற்றை வெளிப்படுத்தினார்.
முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது அறிவிப்பு
முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது விஜயகுமார், முகமது ஆசிக், வேலூர் ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

