நானும் ஒரு விவசாயி.. காலம் மாறும்.. பசுமையான தமிழகம் உருவாகும் - எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி காலம் மாறும் என்றும், பசுமையான தமிழகம் மீண்டும் உருவாகும் என்றும் தேர்தல் பரப்புரையில் பேசியுள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணிகளில் ஆளுங்கட்சியான திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் களத்தில் இறங்கியுள்ளன. முன்பு எப்போதும் இல்லாத வகையில் தமிழக அரசியல் களம் மிகவும் போட்டியாக மாறியிருப்பதால், அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
விவசாயிகளுக்காக துணை நிற்பேன்:
விவசாயம் தழைக்கும் நன்னிலத்தின் மக்கள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தந்த @AIADMKOfficial அரசுக்கு இன்றும் நன்றி தெரிவிக்கின்றனர்.
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) July 18, 2025
விவசாயத்திற்கு எதிரான அரசு இன்றைய ஸ்டாலின் மாடல் அரசு என்பதை மக்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.
விவசாயிகள் எப்போதெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ… pic.twitter.com/AGcyQgyTbg
திருவாரூர் மாவட்டத்தில் இன்று தனது பரப்புரையை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர் "நானும் ஒரு விவசாயி. உங்களோடு நானும் துணை நிற்பேன். விவசாயிகள் எப்போது எல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ, அப்போது எல்லாம் நேசக்கரம் நீட்டுகிற ஒரே அரசாங்கம் அதிமுக அரசாங்கம் ஆகும்.
இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி அவிழும்போது கை தானாக சரி செய்யும். அதுபோல, விவசாயிகள் துன்பப்படும்போது அதிமுக அரசு உங்களுக்கு துணை நின்றது. இவ்வாறு அவர் பேசினார்.
தீவிர பரப்புரை:
எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். வரும் சட்டமன்ற தேர்தலுக்காக அவரது தலைமையிலான அதிமுக பாஜக-வுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில், கூட்டணியில் அன்புமணி - ராமதாஸ் இணைந்த பாமக-வை கொண்டு வரும் சவாலான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும், தமிழக அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கவும் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
தொடர்ந்து தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி திமுக மீதும், மு.க.ஸ்டாலின் அரசு மீதும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கை தனது தலைமையிலான அதிமுக கூட்டணிக்கு பெற்று, அதை வாக்குகளாக மாற்றுவதற்காக அவர் தனது சுற்றுப்பயணத்தை தற்போதே தொடங்கி விட்டார்.
இந்த சுற்றுப்பயணத்தை பல்வேறு கட்டமாக எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





















