ராஜ்குந்த்ரா வழக்கு: ஊடகவியலாளர்கள் 29 பேர் மீது ஷில்பா ஷெட்டி அவதூறு வழக்கு!
ஆபாச பட வழக்கில் கைதாகியுள்ள என் கணவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை எனவும், வேண்டும் என்றே ராஜ்குந்த்ராவின் பெயரை இழிவுப்படுத்தியாக 29 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது வழக்கு.
வெப் சீரிஸ் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றி ஆபாசப்படங்களை எடுத்ததாகவும், இதற்காகத் தனியாக செல்போன் செயலி தயாரித்துப் பதிவேற்றம் செய்வதாக பெண் ஒருவர் அளித்த புகாரில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் பெண்களை இழிவாக நடத்துவது போன்ற பல்வேறு பிரிவுகளில் வழக்குத்தொடரப்பட்ட நிலையில், இதில் வேறு யார் யார் தொடர்புடையவர்களாக உள்ளனர் என்ற கோணத்தில் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே ராஜ் குந்த்ராவினை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த நிலையில், சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வரும் பெண்கள் தவறாக சித்தரித்து, ஆபாச படங்களில் நடிக்க வைக்க கட்டாயப்படுத்துவது அம்பலமாகியுள்ளது. மேலும் இவரது வீட்டில் சோதனை நடத்தியப் பொழுது ஏராளமான ஆபாச சிடிக்கள் இருப்பதைக் கண்டறிந்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தான் ஆபாச பட விவகார வழக்கில் எனது கணவர் ராஜ் குந்த்ராவு எந்த சம்பந்தம் இல்லை என நடிகை ஷில்பா ஷெட்டி தெரிவித்து வருகிறார். ஆனால் ஆபாசப்படங்களை தாயரித்து விற்பனை செய்ததும், அதற்காக தனி செயலியை உருவாக்கியதில் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் தொடர்ச்சியாக இவ்விவகாரம் குறித்து ராஜ் குந்த்ராவிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இதற்கிடையில் தான் இந்த வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என முன்ஜாமீன் கோரி ஆபாச பட சர்ச்சையில் சிக்கி ராஜ் குந்த்ரா மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ் குந்த்ராவுக்கு ஜாமீன் வழங்கினால் இவ்வழக்கில் சாட்சிகளை எல்லாம் அவர் கலைக்க வாய்ப்பிருப்பதாக எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தான், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மும்பை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில், ஆபாச பட வழக்கில் கைதாகியுள்ள என் கணவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை எனவும், வேண்டும் என்றே தவறான அறிக்கை மற்றும் ராஜ்குந்த்ராவின் பெயரை இழிவுப்படுத்தும் வகையில் செயல்பட்டதாக 29 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது அவதூறு வழக்குத்தொடரப்பட்டுள்ளது. இந்த அவதூறு வழக்கு மீதான விசாரணை நாளை மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்காக வரவுள்ளது. நடிகையின் கணவரும், தொழிலதிருபமான ராஜ் குந்த்ரா ஆபாச பட வழக்கில் கைதாகியுள்ள சம்பவம் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.