இஸ்லாமியர்களுக்கு எந்த இடத்திலும் எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் செய்து கொடுப்போம் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பள்ளப்பட்டி நகரக் கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அதிமுக நகர கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள் பலர் கலந்துகொண்டனர். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இஸ்லாமியர்களுக்கு ரமலான் பண்டிகைக்கு நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்காக அரிசியை வழங்கினார். ஆனால் மத்திய அரசு நிதியை நிறுத்திய போது கூட அந்த நிதியை மாநில அரசே வழங்கும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார் என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெருமிதம் தெரிவித்தார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பள்ளப்பட்டி நகரக் கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளப்பட்டி நகரக் கழகச் செயலாளர் சாதிக் பாஷா தலைமையில், முன்னாள் அரசு வழக்கறிஞர் கரிகாலன் மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும்,
மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்பித்தார். தொடர்ந்து இஸ்லாமியர்களுடன் நோன்பு கஞ்சி அருந்தினார். அப்பொழுது பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இஸ்லாமியர்களுக்கு ரமலான் பண்டிகைக்கு நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்காக அரிசியை வழங்கியவர்.
மத்திய அரசு நிதியை நிறுத்திய போது கூட அந்த நிதியை மாநில அரசே வழங்கும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார் என்று பெருமிதம் தெரிவித்தார். அதிகப்படியான இஸ்லாமியர்கள் வசிக்கக்கூடிய பள்ளபட்டி பகுதியில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது பல்வேறு திட்டங்களை செய்திருக்கிறோம்.
அமைச்சராக நான் இருந்த பொழுது பல்வேறு திட்டங்களை செய்திருக்கிறோம். இஸ்லாமியர்களுக்கு எந்த இடத்திலும் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் செய்து கொடுப்போம் என்ற உறுதியோடு அனைவருக்கும் ரமலான் தின வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

