மேலும் அறிய

கொடைக்கானல் க்ளைமேட்டை அனுபவிக்க இங்க போலாம்.. மனதை மயக்கும் ஏழைகளின் மலை பிரதேசம்..!

Kalvarayan Hills: குறைந்த பட்ஜெட்டில் கொடைக்கானல் போக வேண்டும் போல இருந்தால், இந்த இடத்திற்கு ஒருமுறை சென்று வாருங்கள். மனதை மயக்கும் ஏழைகளின் மலை பிரதேசம்.

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கு அடுத்தபடியாக அதிக சுற்றுலாப் பயணிகள் கவரும் இடமாக கல்வராயன்மலை உள்ளது. இங்கு பெரியார், மேகம், கவியம், சிறுகலூர் உள்ளிட்ட 10 நீர்வீழ்ச்சிகள், படகு குழாம், சிறுவர் விளையாட்டு பூங்கா ஆகியவை உள்ளது. இதனால் கல்வராயன்மலை kalvarayan hills ஏழைகளின் சுற்றுலாத்தலமாக சிறந்து விளங்குகிறது.

கல்வராயன்மலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி, விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதியதாக உதயமானது. புதிய மாவட்டத்தில் மலை பிரதேசம், அருவிகள், கோவில்கள், தேவாலயம் உள்ளிட்ட சிறப்பு பெற்ற சுற்றுலா தலங்கள் ஏராளமாக உள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 1000 அடி முதல் 3800 அடி வரை உயரம் கொண்ட கல்வராயன்மலை kalvarayan hills 'ஏழைகளின் மலை பிரதேசம்' என்று அன்போடு அழைக்கப்படுகிறது. இங்கு அச்சமடைய வைக்கும் கொண்டை ஊசி வளைவுகளும் பல உள்ளன. இந்த மலை பச்சைமலை, ஜவ்வாது மலை, சேர்வராயன் மலை ஆகியவற்றுடன் காவிரி ஆற்று வடிநிலத்தை பாலாற்றின் வடிநிலத்திலிருந்து பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளது. இங்குள்ள கரியாலுாரில் சிறுவர் பூங்கா, படகுத்துறை, மூங்கில் குடில்கள் உள்ளன. அத்துடன் கருமந்துறையில் அரசு பழ பண்ணை போன்ற இடங்களும் உள்ளது.

Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?

நீர் வீழ்ச்சிகள்

மேலும் கல்வராயன்மலையில் பெரியார், மேகம், மான் கொம்பு, கவியம், சிறுகலுார், எட்டியாறு போன்ற 6 க்கும் மேற்பட்ட நீர் வீழ்ச்சிகள் உள்ளது. கோமுகி, மணிமுக்தா ஆகிய இரு அணைகள் கொண்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்கள் கொண்ட நகரமான திருக்கோவிலுார் உள்ளது. பழமை வாய்ந்த உலகளந்த பெருமாள் கோவில், நடுநாட்டு சிவ தலங்களில் 11ஆவது தலமாக பாடல் பெற்ற வீரட்டானேஸ்வரர் கோவில்கள் உள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க ஆதிதிருவரங்கம்

மாநில தொல்பொருள் துறையால் பராமரிக்கப்படும் 8ம் , 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கபிலர் குன்று, திருநரங்கொன்றை கிராமத்தில் ஜைன குகை, பார்ஸ்வனதா மற்றும் சந்திரபிரபா ஆகிய இரண்டு கோவில்களும் அமைந்துள்ளது. அதேபோல் திருவண்ணாமலைக்கும் மணலுார் பேட்டைக்கும் இடையே வரலாற்று சிறப்பு மிக்க ஆதிதிருவரங்கம்  (adhi thiruvarangam) கோவில் உள்ளது. இது ஆதிதிருவரங்கத்திற்கு அடுத்த ஸ்ரீரங்கம் என்ற சிறப்பு பெற்றதாகும்.

MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?

குறைந்த பட்ஜெட் கொடைக்கானல் 

சின்ன சேலத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள 100 வருட பழமை வாய்ந்த மேல் நாரியப்பனுார் தேவாலயமும் உள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் ஏராளமான வனப் பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. வனப்பகுதிகள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளது. விழுப்புரம், கடலுார், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலூர், சென்னை போன்ற வெளி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற வெளி மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறைந்த பட்ஜெட்டில் கொடைக்கானல் போக வேண்டும் என்றால் இங்கு ஒருமுறை சென்று வாருங்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Pongal Gift 2026: 8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
Nissan Kait SUV: இதோ, நாங்களும் வர்றோம்.! க்ரெட்டா, சியாராவிற்கு போட்டியாக நிசான் கெய்ட்; First Look
இதோ, நாங்களும் வர்றோம்.! க்ரெட்டா, சியாராவிற்கு போட்டியாக நிசான் கெய்ட்; First Look
Heavy Rain Alert: மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை.! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை மையம் அலர்ட்
மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை.! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை மையம் அலர்ட்
Tata Punch EV Facelift 2026: புதிய ரேஞ்ச், அம்சங்களுடன் களமிறங்கும் TATA Punch EV; யப்பா.! ஒரு சார்ஜுல இவ்ளோ தூரம் போகுமா.?
புதிய ரேஞ்ச், அம்சங்களுடன் களமிறங்கும் TATA Punch EV; யப்பா.! ஒரு சார்ஜுல இவ்ளோ தூரம் போகுமா.?
Embed widget