மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: இன்று கடைசிக்கட்ட மக்களவைத் தேர்தல்.. பள்ளிகள் திறப்பில் தேதி மாற்றம்.. இன்றைய ஹெட்லைன்ஸ்..!
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு அளவிலும், இந்தியா அளவிலும் உலக அளவிலும் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாடு கல்வித்துறை வளர்ச்சிக்கு இன்றைய செய்தித்தாள் செய்திகளே சாட்சி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- முதலில் தபால் வாக்குகளையே எண்ண வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரிக்கு திமுக கடிதம்.
- கடும் வெயிலால் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்; ஜூன் 6க்கு பதில் ஜூன் 10ல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு.
- ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக தலைமை செயலாளர் ஆலோசனை.
- தாய்ப்பால் மற்றும் அதில் தயாரித்த பொருட்களை விற்க கூடாது - உணவு பாதுகாப்பு ஆணையம்.
- பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு இதுவரை 2,28,724 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல்
- கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, கோவை உட்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.
- கால்நடை மருத்துவ பல்கலைக்கழக இளநிலை மருத்துவ படிப்புக்கு வருகின்ற ஜூன் 3 முதல் விண்ணப்பம் விநியோகம்.
- பழங்குடியினர் நல உறைவிட பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் 18ல் இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு.
- சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.70.50 குறைந்துள்ளது.
- கோவை வெள்ளயங்கிரி மலையேற்றத்துக்கான 3 மாத அவகாசம் நிறைவு: இன்று முதல் அனுமதி இல்லை.
- குமரியில் விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம்; சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி
இந்தியா:
- 2023-24 நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.2% உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு.
- தியானம் செய்ய பிரதமர் மோடி ஏன் கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம் செல்ல வேண்டும் என காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி.
- நாடாளுமன்றத்தின் 7வது கட்டமும் இறுதிகட்டமுமான தேர்தல் இன்று நடைபெற இருக்கிறது.
- பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்.
- உத்தரப்பிரதேசத்தில் வெப்ப அலை தாக்குதலால் பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் உயிரிழப்பு.
- விமானத்தில் ஏ.சி. இல்லாமல் பயணிகள் மயங்கி விழுந்த விவகாரம் - ஏர் இந்தியாவுக்கு நோட்டீஸ்.
- சர்வாதிகாரியிடம் இருந்து நாட்டை காப்பாற்றவே மீண்டும் சிறைக்கு செல்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால்.
- வாக்குப்பதிவு முடிந்த பின் பாஜக சதித்திட்டம் - எச்சரிக்கையாக இருக்க தேஜஸ்வி அறிவுறுத்தல்.
- டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் விமான நிலையம் வந்த விஸ்தாரா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல். பீகார்,
- ராஜஸ்தான், டெல்லி உட்பட வட மாநிலங்களில் கடும் வெயில் பாதிப்பால் 60 பேர் உயிரிழப்பு.
உலகம்:
- தைவானுக்கு ஆயுதங்களை விற்ற சில அமெரிக்கா நிறுவனங்களுக்கும் சீனா பொருளாதார தடை விதித்துள்ளது.
- ஜெர்மனியில் பொதுமக்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் - பலர் படுகாயம்.
- சுலோவக்கியா பிரதமர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.
- அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழப்பு.
- கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை.
விளையாட்டு:
- டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா - வங்கதேசம் இன்று மோதல்.
- நார்வே செஸ் போட்டி 2024: 4வது சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வி.
- பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய குத்துச்சண்டை வீரர் நிஷாந்த் தேவ் தகுதி
- சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion