மேலும் அறிய
7 AM Headlines: இலங்கை கடற்படையினரால் 19 மீனவர்கள் கைது.. பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல்.. முக்கிய செய்திகள் இதோ!
7 AM Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 2 படகுகளுடன் ராமநாதபுரத்தை சேர்ந்த 19 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
- 10 நாள் ஸ்பெயின் பயணம் முடிந்து சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; ரூ.3440 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து
- ஊட்டியில் பங்களா கட்டுமான பணியின்போது மண் சரிவு ஏற்பட்டு 6 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு - கட்டிட உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
- நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதாவுக்கு அதிகாரம்; தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
- இதுவரை எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை 14 எம்.பி.சீட், 1 ராஜ்யசபா சீட் தருபவர்களுடன் மட்டுமே கூட்டணி - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
- ஸ்பெயின் நாட்டு பயணம் வெற்றிபோல் தேர்தல் களத்தில் ‘இந்தியா’வின் வெற்றியும் அமையும்: திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
- ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் நீக்கப்படாது - தமிழ்நாடு அரசு விளக்கம்
- TANCET, CEETA தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 12ம் தேதி வரை அவகாசத்தை நீட்டியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்
- சென்னை ஆழ்வார்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டு வரும் எம்.ஜி.எம் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம்
இந்தியா:
- உத்தரகாண்ட் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்; சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக அமலாகிறது.
- டெல்லியில் ஜே.பி.நட்டா முன்னிலையில் அதிமுகவின் 16 முன்னாள் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்
- மக்களவை தேர்தலுக்கு முன்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி கடைசி உரை: காங்கிரஸ் மீது கடும் தாக்கு
- சரத்பவார் அணிக்கு தேசியவாத காங்கிரஸ்-சரத்சந்திர பவார் என்ற புதிய பெயரை வைக்க தேர்தல் ஆணையம் அனுமதி
- டெல்லியில் பிரதமர் மோடி உடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்திப்பு
- இந்தியாவில் செல்போன் உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரத்து 700 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- சம்மனுக்கு ஆஜராகவில்லை எனக் கூறி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை முறையிட்டுள்ளது.
- ஜார்க்கண்ட் சத்ரா மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை அதிகாரிகள் இருவர் வீர மரணம் அடைந்துள்ளனர்.
உலகம்:
- வன்முறை, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
- அண்டார்டிகாவில் ஆராய்ச்சி பணிகள்: நவீன மையத்தை நிறுவியது சீனா.
- பலூசிஸ்தானில் அடுத்தடுத்து வெடித்த குண்டுகள்; 26 பேர் இதுவரை உயிரிழப்பு.
- பிலிப்பைன்சில் கடும் நிலச்சரிவு - 5 பேர் உயிரிழப்பு
- அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; ஒரு மாணவர் மரணம்
விளையாட்டு:
- அண்டர் 19 உலகக் கோப்பை: 2வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்.
- சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ரஞ்சி கோப்பை போட்டியை காண பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.
- மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் நம்பர் 1: ஐசிசி தரவரிசையில் பும்ரா உலக சாதனை
- 1000 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது அணி என்ற பெருமையை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது.
- மறைந்த செஸ் வீரர் மிர் சுல்தான் கான் பாகிஸ்தானின் முதல் கிராண்ட்மாஸ்டர் என்ற பட்டத்தை வென்றுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion