மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தின் முக்கிய நிகழ்வுகள்! காலை தலைப்புச் செய்திகள் இதோ!
7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம் - புத்தாடை அணிந்து பொங்கலிட்டு மக்கள் மகிழ்ச்சி
- தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- திமுக ஆட்சியில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகள் மூலம் இதுவரை 6.54 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்
- ஒழுக்கம், நேர்மை இருந்தாலே வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் - நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து
- கோலாகலமாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி - 17 காளையை அடக்கிய வீரருக்கு கார் பரிசு
- அண்ணாமலையை தன்னுடைய அரசியல் கட்சியில் முதலமைச்சராக்க ரஜினி நினைத்தாக ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சு
- நீலகிரி அருகே டிரான்ஸ்பார்மர் மீது அரசு பேருந்து மோதி விபத்து - டிரைவர் உட்பட 2 பேர் மின்சாரம் தாக்கி பலி
- விழுப்புரம் அருகே நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா
- தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் தொடரும் தாக்குதல்களுக்கு முத்தரசன் கடும் கண்டனம்
இந்தியா
- மத்தியப்பிரதேசத்தில் உள்ள வழிபாட்டு தலத்தில் திடீரென கழுத்தை அறுத்துக் கொண்ட நபரால் பரபரப்பு
- உத்தரப்பிரதேசத்தில் சர்க்கரை ஆலை பாய்லர் வெடித்து 3 பேர் உயிரிழப்பு
- பின்னணி பாடகர் வீரமணி தாசனுக்கு கேரள அரசு மற்றும் திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு இணைந்து ஹரிவராசனம் விருது அறிவிப்பு
- நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவிப்பு
- ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கிடுகு ருத்ர ராஜூ நியமனம் - புதிய தலைவராக ஒய்.எஸ்.ஆர்.ஷர்மிளா நியமிக்கப்பட வாய்ப்பு
- சபரிமலையில் சரண கோஷம் முழங்க பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் காட்சி தந்த ஐயப்பன்
- அரசு அதிகாரிகளை பேட்டால் தாக்கிய பாஜக எம்.எல்.ஏ. இந்தூர் கிரிக்கெட் வாரிய தலைவராக தேர்வு
- சச்சினையும் விட்டுவைக்காத டீப் ஃபேக் வீடியோ - ஆன்லைன் கேமுக்கு விளம்பரம் செய்யும் வீடியோவால் பரபரப்பு
- பிரதமர் மோடி இன்று கேரளா பயணம் - கொச்சியில் பிரமாண்ட பேரணியில் பங்கேற்கிறார்
- டெல்லியில் பனி மூட்டத்தால் விமானங்கள் தாமதம் - கோபத்தில் விமானியை தாக்கிய பயணி
உலகம்
- ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்து நூற்றுக்கணக்கான வீடுகள் எரிந்து சாம்பல்
- பிரேசிலில் கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 11 பேர் உயிரிழப்பு
- அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதி ஆயுத குழுவினர் ஏவுகணை தாக்குதல்
- பசிபிக் பெருங்கடல் அருகே விமான விபத்து - தேடும் பணி தீவிரம்
- ஈரான் அதிபருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் சந்திப்பு
- தென் கொரியா பகுதியில் மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
விளையாட்டு
- ப்ரோ கபடி லீக் போட்டியுல் யு மும்பா அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அபார வெற்றி
- ப்ரோ கபடி லீக் போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் வெற்றி
- சர்வதேச கிரிக்கெட்டில் நான் சிறப்பாக விளையாட ரோகித் ஷர்மாவும் ஒரு காரணம் - ஷிகர் தவான் கருத்து
- ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு - திரிபுரா இடையேயான ஆட்டம் ட்ரா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
கிரிக்கெட்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion