மேலும் அறிய

New Year 2023: சென்னை கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட தடை - காவல்துறை அதிரடி அறிவிப்பு..!

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக 31ம் தேதியன்று இரவு, பொதுமக்கள் யாரும் கடற்கரைகளுக்கு செல்லக்கூடாது என காவல்துறை அறிவித்துள்ளது.

கடற்கரைகளுக்கு வர வேண்டாம் - காவல்துறை:

இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி டிசம்பர் 31ம் தேதி இரவு, 8 மணிக்கு  மேல் கடற்கரைகளுக்கு  செல்ல காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சென்னையில் உள்ள மெரினா, சாந்தோம்,  பெசன்ட் நகர் எலியட்ஸ், நீலாங்கரை மற்றும் பாலவாக்கம் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கடற்கரை மணற்பகுதிகள் மற்றும் கடற்கரை ஓரங்களில்  பொதுமக்களுக்கு அனுமதியில்லை. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். எனவே, 31ம் தேதியன்று இரவு 8 மணிக்கு மேல் கடற்கரை மணற்பகுதிக்கு பொதுமக்கள் வரவேண்டாம் என காவல்துறை தரப்பில் கோரப்பட்டுள்ளது. 

பலத்த பாதுகாப்பு:

முன்னதாக, சென்னை வேப்பேரி பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பேசிய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜீவால் ஐபிஎஸ், 2023 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு விழாவை முன்னிட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை விதிக்கும் விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

“வரும் 31ஆம் தேதி 2023ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறை ஏற்பாடுகள் செய்துள்ளன.  மொத்தம் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர், 1500 ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவர். மெரினா கடற்கரையில் கூடுதலாக கடற்கரை பாதுகாப்பிற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றார்.

தீவிர கண்காணிப்பு:

முக்கிய சாலையான காமராஜ் சாலை வாலாஜா சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகனங்கள் பார்க் செய்ய அனுமதி இல்லை. நடமாடும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் அமைக்கப்படும். பைக் ரேசிங் கட்டுப்பாடுகள் அதிகமாகக் கண்காணிக்கப்படும். ஹோட்டல் விடுதியில் நடத்தப்படும் கொண்டாட்டத்தில் 18 வயது கீழே உள்ள நண்பர்களை அனுமதிக்கக் கூடாது. கொண்டாட்டத்திற்கு மாலை ஆறு மணி முதல் இரவு ஒரு மணி வரை அனுமதி அளித்துள்ளோம். எவ்விதமான போதைப்பொருட்கள் வைத்திருந்தாலும் அவர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு:

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத் துறை சார்பாக தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் வைத்துள்ளோம். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை ஏற்படுத்தும் விதமாக தனியார் ஹோட்டல் விடுதிகளில் குடித்து விட்டு வாகனங்களை ஓட்ட வேண்டாம் என்று அறிவுறுத்துமாறு அவர்களிடம் கூறியுள்ளோம். குறிப்பாக பெண்களுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம்.

க்யூ ஆர் கோட் என்னபடும் புதிய செய்முறையை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளோம். போதையில் இருக்கும் நபர்கள் அவர்கள் இடத்துக்கு போவதற்காக இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று(29.12.2022) இரவு முழுவதும் அனைத்து வாகன சோதனைகளும் செய்யும் இடத்தில் அனைவருக்கும் இந்த க்யூ ஆர் பிரதி கொடுக்கப்படும். மேலும் அனைத்து தனியார் ஹோட்டல் விடுதிகளிலும் ஓட்டப்படும். விழிப்புணர்வுக்காக அனைத்து சமூக வலைத்தளங்களில் மற்றும் வானொலி ஆகியவற்றில் ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளோம். என, சங்கர் ஜீவால் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஒரு வார்த்தை கூட பேசாத ராகுல் காந்தி" கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்Salem leopard | இறந்து கிடக்கும் ஆடுகள்! சிறுத்தை பீதியில் மக்கள்! வனத்துறைக்கு கோரிக்கைChennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஒரு வார்த்தை கூட பேசாத ராகுல் காந்தி" கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
Embed widget