மேலும் அறிய

Kanchipuram Lakes: மொத்தம் இத்தனையா? மழை நின்றபிறகும் நிரம்பும் ஏரிகள்.. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஏரிகளின் நிலவரம்..!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 306 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. பாலாறு படுகைக்கு கீழ் வரும் ஏரிகளில் 355 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் ஏரிகள் நிறைந்த மாவட்டங்களாக இருந்து வருகிறது. பாலாறு படுகைக்கு கீழ் வரும் ஏரிகள் காரணமாக அதிக அளவு விவசாயமும், காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில் நிரம்பும் ஏரிகளை நம்பிதான், காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். அதேபோல காஞ்சிபுரம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த குடிநீர் ஆதாரமாகவும் சில ஏரிகள் இருந்து வருகின்றன. 

Kanchipuram Lakes: மொத்தம் இத்தனையா? மழை நின்றபிறகும் நிரம்பும் ஏரிகள்.. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஏரிகளின்  நிலவரம்..!
 
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தை சேர்ந்த பிரதான ஏரிகள்
 
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் பெரிய ஏரியாக மதுராந்தகம் ஏரி, தென்னேரி, உத்திரமேரூர் ஏரி, ஸ்ரீபெரும்புதூர் ஏரி, எடமிச்சி ஏரி, தாமல் ஏரி  ஆகியவை உள்ளன. 
 
வடகிழக்கு பருவமழை
 
கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை அக்டோபரில் தொடங்கியது. எதிர்பார்த்ததை விட தமிழகத்தில் நல்ல மழை பெய்தது. இந்தியாவில், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என்ற இரு பருவ காலங்கள் மூலமாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழைதான் அதிக அளவில் கைகொடுக்கும். வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர், ஜனவரி மாதங்கள் வரையில் நீடிக்கும். அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Kanchipuram Lakes: மொத்தம் இத்தனையா? மழை நின்றபிறகும் நிரம்பும் ஏரிகள்.. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஏரிகளின்  நிலவரம்..!
 
கடந்த ஓராண்டு மேலாக அவ்வப்பொழுது மழை பெய்து வந்ததால், ஏரிகள் முழுமையாக வற்றாமல் இருந்து வந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 306 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.
 
பாலாறு படுகை ஏரிகள்
 
காஞ்சிபுரம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் சுமார் 1022 ஏரிகள் உள்ளன. அவற்றில் 355 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 101 ஏரிகள், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 205 ஏரி, சென்னையை மாவட்டத்தை சேர்ந்த 3 ஏரி, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 45 ஏரிகள் ஆகியவை முழு (100 சதவீத கொள்ளளவு) கொள்ளளவை எட்டியுள்ளது. 
 
Kanchipuram Lakes: மொத்தம் இத்தனையா? மழை நின்றபிறகும் நிரம்பும் ஏரிகள்.. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஏரிகளின்  நிலவரம்..!
 
76% - 99%  கொள்ளளவை எட்டிய ஏரிகள்
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 41 ஏரிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 177 ஏரிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில்  29 ஏரிகள், சுமார் 76% சதவீதத்திலிருந்து 99% சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது.

Kanchipuram Lakes: மொத்தம் இத்தனையா? மழை நின்றபிறகும் நிரம்பும் ஏரிகள்.. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஏரிகளின்  நிலவரம்..!
 
51%- 75% கொள்ளளவை எட்டிய ஏரிகள்
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 132 ஏரிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 98 ஏரிகள், திருவண்ணாமலையில் 13 ஏரிகள்,  75 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது.
 
26%- 50% கொள்ளளவை எட்டிய ஏரிகள்
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 107 ஏரிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 48 ஏரிகள்,  திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 ஏரிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் 2 ஏரி ,26%- 50% கொள்ளளவை எட்டியுள்ளது.
 
25 சதவீதத்திற்கும் கீழ் உள்ள ஏரிகள்
 
அனைத்து ஏரிகளும் 25 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருவதால், கால்வாய்களில் நீர்வரத்து அதிகரிக்க துவங்கியிருப்பதால், விரைவாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்னும் பல ஏரிகள் நிரம்பும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Thiruppavai 19: அழகும் ஆற்றலும் கொண்ட நப்பின்னையே.! கண்ணன் மனைவியை புகழும் ஆண்டாள்...
Thiruppavai 19: அழகும் ஆற்றலும் கொண்ட நப்பின்னையே.! கண்ணன் மனைவியை புகழும் ஆண்டாள்...
One Day College Student: ஒரு நாள் கல்லூரி மாணவியராக மாறிய மகளிர்... சேலத்தில் பெண்கள் நெகிழ்ச்சி.
One Day College Student: ஒரு நாள் கல்லூரி மாணவியராக மாறிய மகளிர்... சேலத்தில் பெண்கள் நெகிழ்ச்சி.
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
Embed widget