(Source: ECI | ABP NEWS)
Gold Rate 2nd July: அட சாமி.!! 2 நாட்களில் ரூ.1,200 உயர்ந்து அதிர்ச்சி அளித்த தங்கம் விலை; இன்றைய விலை என்ன தெரியுமா.?
கடந்த வாரம் தொடங்கி திங்கட் கிழமை வரை குறைந்து வந்த தங்கத்தின் விலை, 2 நாட்களில் அதிரடியாக 1,200 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?

கடந்த வாரம் திங்கட் கிழமையிலிருந்து, இந்த வாரம் திங்கட் கிழமை வரை படிப்படியாக குறைந்து வந்த தங்கத்தின் விலை, 2 நாட்களில் 1,200 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது. இன்று சவரனுக்கு 360 ரூபாய் விலை உயர்ந்த நிலையில், தங்கத்தின் விலை என்ன.? பார்க்கலாம்.
ஒரு வாரமாக குறைந்து வந்த தங்கத்தின் விலை
கடந்த வாரம் திங்கட் கிழமையான 23-ம் தேதி, ஒரு கிராம் தங்கம் 9,230 ரூபாயாகவும், ஒரு சவரன் 73,840 ரூபாயாகவும் இருந்தது. 24-ம் தேதி விலை குறைந்து, ஒரு கிராம் 9,155 ரூபாயாகவும், ஒரு சவரன் தங்கம் 73,240 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து, 25-ம் தேதி மேலும் விலை குறைந்து, கிராம் 9,070 ருபாய்க்கும், சவரன் 72,560 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 26-ம் தேதி அதே விலையில் நீடித்த தங்கம், 27-ம் தேதி மேலும் விலை குறைந்து, ஒரு கிரம் 8,985 ரூபாய்க்கும், ஒரு சவரன் 71,880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
28-ம் தேதி இன்னும் விலை குறைந்து, ஒரு கிராம் 8,930 ரூபாயாகவும், ஒரு சவரன் 71,440 ரூபாயாகவும் விற்பனையானது. 29-ம் தேதி அதே விலையில் நீடித்த நிலையில், இந்த வாரம் திங்கட்கிழமையான 30-ம் தேதியும் விலை குறைந்து, ஒரு கிராம் 8,915 ரூபாய்க்கும், ஒரு சவரன் 71,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
2 நாட்களில் அதிரடியாக விலை அதிகரிப்பு - இன்றைய நிலவரம்
இந்த நிலையில், ஜூலை 1-ம் தேதியான நேற்று அதிரடியாக சவரனுக்கு 840 ரூபாய் விலை உயர்ந்தது தங்கம். அதன்படி, ஒரு கிராம் 9,020 ரூபாய்க்கும், ஒரு சவரன் 72,160 ரூபாய்க்கும் விற்பனையானது.
இதைத் தொடர்ந்து, இன்றும் சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்துள்ளது தங்கத்தின் விலை. அதன்படி, இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 9,065 ரூபாயாகவும், ஒரு சவரன் 72,520 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு வாரமாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், பொதுமக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால், 2 நாட்களில் மட்டும் 1,200 ரூபாய் விலை உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதே விலையில் நீடிக்கும் வெள்ளி
வெள்ளியின் விலை ஒரு கிராம் 120 ரூபாய் என்ற அதே உச்ச நிலையில் நீடித்து வருகிறது. கடந்த 23, 24 தேதிகளில் ஒரு கிராம் 119 ரூபாயாக குறைந்த நிலையில், 25-ம் தேதி மட்டும் ஒரு ரூபாய் உயர்ந்து 120-க்கு சென்றது.
தொடர்ந்து 27-ம் தேதி வரை அதே விலையில் நீடித்த நிலையில், 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை ஒரு கிராம் 119 ரூபாய் என்ற அளவில் நீடித்தது.
அதைத் தொடர்ந்து, ஜூலை 1-ம் தேதி கிராமிற்கு ஒரு ரூபாய் உயர்ந்து மீண்டும் 120 ரூபாயை அடைந்தது. அதைத் தொடர்ந்து இன்றும் அதே விலையில் நீடிக்கிறது. அதன்படி, ஒரு கிராம் 120 ரூபாயாகவும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது.





















