News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Food: நன்மைகளை அள்ளித்தரும் சிவப்பு அவல்..! யாரெல்லாம் சாப்பிடலாம்? சாப்பிடுவது எப்படி?

சிவப்பு அவலில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின், மாங்கனீஸ் என பல சத்துக்கள் அடங்கியிருப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் ஒரு உணவாக இது இருக்கிறது.

FOLLOW US: 
Share:

அவல் என்பது பிரபலமான உணவு. சிவப்பு அவல் வெள்ளை அவல் என இரண்டு வகைப்படும். அவலில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின், மாங்கனீஸ் என அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது. அவலை பல விதமாக சமைத்து சாப்பிடலாம். அவலில் அப்படியே வெல்லம் மற்றும் தேங்காய் சேர்த்து சாப்பிட கொடுக்கலாம். இல்லையெனில் உப்புமா போல் செய்து சாப்பிடலாம். அவலில் இவற்றை தவிர பாயாசம், லட்டு, அவல் நெய் உருண்டை என ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.

சிவப்பு அவல்:

தட்டையான அரிசியால் செய்யப்படுவது தான் அவல். சிவப்பு அரிசியிலிருந்து தயார் செய்யப்படுவது சிவப்பு அவல். காலை மற்றும் மாலை வேளைக்கு ஏற்ற உணவு. காலை உணவாக அவலை எடுத்துக்கொண்டால் புத்துணர்ச்சியாக இருக்கும், அந்த நாளுக்கு தேவையான ஊட்டச்சத்து கொடுக்கும். நமது உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவும்.

சிவப்பு அவலில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் ரத்த சோகை வராமல் தடுக்கும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் அவலை உட்கொள்ளலாம். மேலும் அவலை சாலட் போல செய்து எலுமிச்சைசாறு பிழிந்து சாப்பிடுவதன் மூலம் அவலில் இருக்கும் இரும்புச்சத்தை உடல் உறிஞ்சிவதற்கு உதவும்.

சர்க்கரை வியாதிக்கு நல்லது:

நீரிழிவு நோயாளிகளுக்கு அடிக்கடி பசியெடுப்பது வழக்கம் தான். அந்த நேரத்தில் அரிசி வகைகளை சாப்பிடாமல், அவலை சாப்பிட்டால் பசி அடங்கும். மேலும் அவல் சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவு உயராது.

சிவப்பு அவல் ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை கரைக்கும். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் அல்லது உடல் பருமன் மூலம் உடல் உபாதைகளை சந்திக்கும் நபர்கள் அவலை எடுத்துக்கொள்ளலாம்.

கலோரிகள் குறைவு:

அவலின் மற்றுமொறு சிறப்பு என்னெவென்றால் இதில் கலோரிகள் மிகவும் குறைவு. கலோரிகள் குறைவாக இருந்தாலும் அவல் சப்பிட்டால் பசியை கட்டுப்படுத்தும். ஆனால் ஒரு சிலர் அவலை வறுத்து வேர்கடலை உடன் சேர்த்து சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடும் பொது கலோரிக்கள் அதிகமாகும். அவல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மேலும் எலும்புகளை வலுவாக மாற்றி எலும்பு முறிவை தடுக்கும்.

சிவப்பு அவல் உடல் பலவீனமாக இருந்தால் சத்து கொடுத்து வலுவாக்கும். வளரும் குழந்தைகளுக்கு இது ஒரு சிறந்த உணவாகும். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது சிறுது அவலை பாலில் சேர்த்து நாட்டுச்சர்க்கரை, ஏலத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து கொடுக்கலாம்.  

Published at : 01 Apr 2023 04:14 PM (IST) Tags: benefits aval flattend rice red rice

தொடர்புடைய செய்திகள்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

டாப் நியூஸ்

India Next T20 Captain: 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் யார்? இந்த 4 வீரர்கள் மீது கண் வைத்த பிசிசிஐ!

India Next T20 Captain: 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் யார்? இந்த 4 வீரர்கள் மீது கண் வைத்த பிசிசிஐ!

Breaking News LIVE: பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் - புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடக்கம்

Breaking News LIVE: பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் - புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடக்கம்

Virat Kohli: டி20 போட்டிகளில் அதிக அரைசதம்.. இறுதிப்போட்டியில் அதிக ரன்கள்.. விராட் கோலியின் சாதனை பட்டியல்..!

Virat Kohli: டி20 போட்டிகளில் அதிக அரைசதம்.. இறுதிப்போட்டியில் அதிக ரன்கள்.. விராட் கோலியின் சாதனை பட்டியல்..!

Arshdeep Singh: சிங்குனா கிங்குடா..! விமர்சனங்களை நொறுக்கி தள்ளிய அர்ஷ்தீப் சிங் - யார்க்கரில் விக்கெட்டுகளை பதம் பார்த்து மிரட்டல்

Arshdeep Singh: சிங்குனா கிங்குடா..! விமர்சனங்களை நொறுக்கி தள்ளிய அர்ஷ்தீப் சிங் - யார்க்கரில் விக்கெட்டுகளை பதம் பார்த்து மிரட்டல்