Onam 2022: ”ஓணம் வந்தல்லோ” : அறுவடை திருநாளில் மலையாளிகளின் செய்யும் டாப் உணவுகளும் ! செய்முறையும்!
சில உணவுகள் மலையாளிகள் அல்லாத பலருக்கும் ஃபேவெரெட்டாக இருக்கலாம்.
மலையாளிகளின் அறுவடை தினமாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை , தென் தமிழகத்தின் சிறப்பு மற்றும் தனித்துவமான பண்டிகையாக கருதப்படுகிறது. உணவு, உடை , வழிபாட்டு முறை என அனைத்துமே கூடுதல் சிறப்புதான். ஓணம் பண்டிகையின் பொழுது வழங்கப்படும் பிரத்யேக பாயசம் மற்றும் சில உணவுகள் மலையாளிகள் அல்லாத பலருக்கும் ஃபேவெரெட்டாக இருக்கலாம். உங்களுக்காகத்தான் இங்கே சில ஓணம் உணவுகளையும் அவற்றை செய்யும் வழி முறைகளையும் கொடுத்துள்ளோம்.
தேங்காய் சோறு :
தேவையான பொருட்கள்
250 கிராம் சோறு
எண்ணெய்
கடுகு
சீரகம்
உளுத்தம் பருப்பு
முந்திரி பருப்புகள்
கறிவேப்பிலை
2-3 பச்சை மிளகாய் ( நறுக்கியது_
1 கப் தேங்காய்( துருவியது)
2 கப் தேங்காய் பால்
கொத்தமல்லி இலைகள்( நறுக்கியது)
எலுமிச்சை சாறு
உப்பு மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சுவைக்கு ஏற்ப
செய்முறை :
ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் எண்ணெயை சூடாக்கவும். இப்போது கறிவேப்பில்லை , பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து அதனுடன் சீரகம், உளுத்தம் பருப்பு ,சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும் . இப்போது முந்திரியை சேர்த்துக்கொள்ளுங்கள். இதனுடன் மீதமுள்ள துருவிய தேங்காய் , தேங்காய்பால் , கொத்தமல்லி என அனைத்தையும் கலந்து 2-3 நிமிடங்கள் வேகவிடுங்கள். பின்னர் வேக வைத்த சோற்றினை சேர்த்து கிளறி பரிமாறவும் . இப்போது சுவையான தேங்காய் சாதம் தயார்
பச்சடி:
தயிர், அன்னாசிப்பழம் மற்றும் தேங்காய் மற்றும் பலவிதமான மசாலாப் பொருட்களுடன் மிளகுத்தூள் சேர்த்து செய்யப்படும் இந்த பச்சடி சோறு அல்லது சப்பாத்திக்கு பொருத்தமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
½ கப் தயிர்
கடுகு
3-4 முழு சிவப்பு மிளகாய்
தேங்காய் விழுது
பச்சை மிளகாய்,( நறுக்கியது)
கறிவேப்பிலை
½ தேக்கரண்டி இஞ்சி( நறுக்கியது)
1 கப் அன்னாசி(நறுக்கியது)
செய்முறை :
ஒரு கடாயை எடுத்து அதில் எண்ணெயை சூடாக்கவும் , அதில் கடுகினை சேர்த்து அது வெடிக்கும் வரை காத்திருங்கள். இப்போது பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவும். இதனுடன் அன்னாசி, தேங்காய் விழுது சேர்த்துக் கிளறி சிறிது நேரம் வேக விடவும். இப்போது தயிரை சேர்த்தால் , பச்சடி தயார்.
பால் பாயசம்:
இது இல்லாமல் ஓணம் பண்டிகையே நிறைவடையாது. இந்த பால் பாயாசம் சோற்றினை பயன்படுத்தி செய்வதால் பிரத்யேகமானது.
தேவையான பொருட்கள்
50 கிராம் சோறு
1 லிட்டர் பால்
1 தேக்கரண்டி ஏலக்காய் தூள்
1 கப் வெல்லம் தூள்
நெய் 2-3 தேக்கரண்டி
ஒரு கப் மிக்ஸ்ட் நட்ஸ்
குங்குமப்பூ
செய்முறை :
ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் பால் மற்றும் வேகவைத்த சோற்று பருக்கைகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.சிறிது நேரம் வேகவைத்து கொதிக்க விடவும்.இப்போது, ஏலக்காய் தூள், குங்குமப்பூ மற்றும் வெல்லம் தூவி, அதை வெறும் 2-3 நிமிடங்கள் வேக விடுங்கள். இதற்கிடையில், ஒரு கடாயை எடுத்து அதில் நெய்யை சூடாக்கவும். அதில் மிக்ஸ்ட் நட்ஸை பொன்னிறமாக பொறித்து எடுத்துக்கொள்ளுங்கள் . இதனை பால் மற்றும் இதை பால் மற்றும் சோறு அடங்கிய கலவையில் சேர்த்து சூடாக பரிமாறவும்.