Avocado Strawberry MilkShake:மாலை நேர ஸ்நாக்ஸ்; ஆரோக்கியம் நிறைந்த மில்க்ஷேக் ரெசிபி இதோ!
Avocado Strawberry MilkShake: ஸ்நாக்ஸ் நேரத்தில் அவகாடோ, ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக் அருந்தலாம். அதன் செய்முறையை இங்கே காணலாம்.
![Avocado Strawberry MilkShake:மாலை நேர ஸ்நாக்ஸ்; ஆரோக்கியம் நிறைந்த மில்க்ஷேக் ரெசிபி இதோ! How to Make a Avocado Strawberry MilkShake at home Healthy Drink Avocado Strawberry MilkShake:மாலை நேர ஸ்நாக்ஸ்; ஆரோக்கியம் நிறைந்த மில்க்ஷேக் ரெசிபி இதோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/02/ceadedefc81a6e81f2fb692aee9fa5f31722602403967333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஊட்டச்சத்து நிறைந்த அவகாடோ, ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக் எப்படி செய்வது என்று காணலாம்.
அவகாடோ
அவகாவோவில் உள்ள சத்துக்கள் உடல்நலனுக்கு அவசியமானவை என்று சொல்லப்படுகிறது. இதில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்து, பொட்டாசியம், நார்ச்சத்து நிறைந்து உள்ளன. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த அவகாடோ உதவும். ஆராய்ச்சிகளின் முடிவுகளில் அவகோடா இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவகோடா பழங்களை உணவில் சேர்த்து வந்தால், உடலில் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நார்ச்சத்துடன் சேர்ந்து மேலும் பல பலன்களைக் கொண்டிருக்கும் இந்த அவகோடா உடலுக்குத் தேவையான சத்துகளை ஒருசேர எடுத்துக் கொடுப்பதில் தனித்து விளங்குகிறது. அதோடு, நார்ச்சத்து அதிகம் என்பதால் உடல் எடை குறைக்க வேண்டும் நினைப்பவர்களும் இதை சாப்பிடலாம். அடிக்கடி ஏற்படும் பசி உணர்வை தவிர்க்கும். வயிறு நிரம்பியிருக்கும் திருப்தியை அளிக்கும்.
அவகோடாவில் ஸ்மூதி மட்டுமல்ல, டோஸ்ட், தோசை, க்ரேவி, சாலட் உள்ளிட்டவைகளையும் செய்யலாம். அவகோடா DIP கூட செய்து நாச்சோ உடன் சாப்பிடலாம்.
ஸ்ட்ராபெர்ரி:
ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி, ஆன்டி- ஆக்ஸிடண்ட் உள்ளிட்டவற்றை நிறைந்துள்ளது.இது இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் உள்ளிட்டவையும் நிறைந்துள்ளது.
அவகோடா - ஸ்ட்ராபெர்ரி ஸ்மூதி
என்னென்ன தேவை?
அவகோடா - 2 பழம்
ஸ்ட்ராபெர்ரி - ஒரு கப்
தேன் - தேவையான அளவு
பால் - 1/2 லிட்டர்
துருவிய பாதாம், பிஸ்தா - சிறிதளவு
கருப்பு திராட்சை - சிறிதளவு
செய்முறை:
அவகோடாவை தோல் நீக்கி எடுக்கவும். ஸ்ட்ராபெர்ரி பழங்களை சுத்தப்படுத்தவும். இரண்டையும் மிக்ஸி ஜாரில் போட்டு, அதோடு இனிப்பு தேவைப்படும் அளவுக்கு தேன் சேர்க்கவும். இப்போது பால் சேர்த்து அரைக்கவும். தொடர்ந்து அரைக்க வேண்டாம். சில நொடிகள் விட்டு விட்டு அரைக்கவும். quick mix மோட் என்றும் சொல்லலாம். நன்றாக மைய அரைக்க வேண்டும் என்றில்லை. பால், அவகோடா, ஸ்ட்ராபெர்ரி மூன்றையும் நன்றாக மிக்ஸ் மட்டும் செய்தாலே போதுமானது. இதோடு துருவிய பாதாம், முந்திரி, திராட்ச்சை என உங்களுக்குப் பிடித்த நட்ஸ், சூரியகாந்தி, பூசணி விதைகள் கூட சேர்க்கலாம். சீட்ஸ் வகைகளில் ஜிங்க் அதிகமாக இருப்பதால் உடலுக்கு நல்லது. காலை உணவோடு, உணவு நேரத்திற்கு முன்பான ஸ்நாக்ஸ் என எல்லா நேரங்களிலும் இதை அருந்தலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)