மேலும் அறிய

Garlic Benefits : பூண்டின் முழு நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கணுமா? இதை ஃபாலோ பண்ணுங்க..

பூண்டு அதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக, பாரம்பரியமாக மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. 

வெள்ளைப் பூண்டில் எண்ணிலடங்காத பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. அதிலும் சமையலில் பயன்படுத்தும்  பூண்டை நாம் எவ்வாறு பயன்படுத்தினால் அதில் முழு நன்மைகளையும் பெறலாம் என உணவு நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

பூண்டு ஒரு சிறந்த , மருந்தாகவும், வாசனைப் பொருளாகவும், அழகு சாதனப் பொருளாகவும், உணவாகவும் பயன்படுகிறது.

நமது அன்றாட சமையலில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன.

இந்தியா ,இலங்கை ,இத்தாலி, ஸ்பெயின், சீனா போன்ற நாடுகளில் அனைத்து உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது.  அதிகளவான தாதுக்கள் ,அயோடின், சல்பர், குளோரின் ,விட்டமின்கள் போன்ற ஏராளமான மருத்துவ குணங்கள் பூண்டில் அடங்கியுள்ளன. அதிலும் பூண்டானது இந்திய உணவுகளில் தற்போது இன்றியமையாத ஒரு பொருளாக மாறி இருக்கிறது. இந்திய உணவுகளில் சுவையூட்டியாக இந்த பூண்டு அதிகளவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

பூண்டில் காணப்படும் அல்லிசின் என்ற மூலப்பொருள்  நறுமணத்தையும், மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளது.

பூண்டை சமைப்பதற்காக வெப்பப்படுத்தும்போது அதில் இருக்கும் மூலப்பொருட்கள் அதன் தன்மையை இழந்து விடுவதாக உணவு நிபுணர்கள் கூறுகின்றனர்.
 இதனால் நமக்கு கிடைக்க இருக்கும் சத்துக்களும் முழுமையாக கிடைக்கப்பெறாமல் போய்விடுகிறது. ஆகவே இதை தவிர்ப்பதற்கு ஒரு எளிய வழியாக பூண்டை உரித்தோ அல்லது தட்டியோ ஒரு பத்து நிமிடங்களுக்கு மேல் வைத்திருக்க வேண்டும் அப்போது அல்லிசின் என்ற வேதிப்பொருள் சுரந்து பூண்டில் நிறைந்திருக்கும் உயிர் சத்துக்களை அப்படியே தக்க வைக்கிறது. பின்னர் இந்த பூண்டை சமைப்பதற்கு பயன்படுத்தலாம் என பரிந்துரைக்கிறார்கள் உணவு ஆலோசனை நிபுணர்கள்.

ஆகவே பூண்டை சமையலில் சேர்க்கும் முன்னர் அதனை உரித்தோ, தட்டியோ. அல்லது நறுக்கியோ பத்து நிமிடங்களுக்கு மேலாக வைத்துவிட்டு அதன் பின்னர் சமையலில் சேர்த்தால் அதன் முழு பலனையும் நாம் பெறலாம். இந்தப் பூண்டில் அதிகளவான  ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன . மேலும் சக்திவாய்ந்த ஆன்டிவைரல், ஆண்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. 

பூண்டு பல நூற்றாண்டுகளாக சமையலில் பயன்படுத்தப்படுகிறது. அதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக, இந்த மூலிகை பாரம்பரியமாக ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. பூண்டில் துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்களும் உள்ளன. வைட்டமின் சி, நியாசின் மற்றும் தையமின் ஆகியவையும் இதில் நிறைந்துள்ளன.

1.இது சளி மற்றும் காய்ச்சலை தடுக்கிறது.

2.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

3.இரத்த சர்க்கரை அளவை சமன் செய்கிறது.

4.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

5எய்ட்ஸ் எடை இழப்பு போன்றவற்றுக்கு நிவாரணியாக இருக்கிறது.

அதிலும் அந்த பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அதனால் இன்னும் நிறைய நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக பூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும் எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. மேலும் இந்த பூண்டானது ரத்த அழுத்தம் ,வாயுத்தொல்லை போன்றவற்றில் இருந்து நிவாரணமளிப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது. அதிக வேலைப்பளு கொண்டவர்கள், மன அழுத்தத்திற்கு ஆளானோர் தினமும் பச்சை பூண்டை சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம் நீங்கி புத்துணர்ச்சி பெறுவார்கள் என கூறப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget