Samba Wheat Pongal : கோதுமை ரவை இருக்கா? கோதுமை பொங்கல் செய்யலாமா.. சுவையா, ஆரோக்கியமா..
கோதுமை ரவை பொங்கல் தென்னிந்தியாவில் கொஞ்சம் பிரபலமான உணவுதான். இதனை டாலியா பொங்கல் என்று சொல்கிறார்கள்.
காலை எழுந்தவுடன் என்ன டிஃபன் என்பது இல்லத்தரசிகளுக்கு பெரும் சுமை. அதுவும் வீட்டில் அரைத்து வைத்த மாவு இல்லாவிட்டால் அவ்வளவுதான் உலக டென்ஷன் மொத்தமும் தலையில் விடிந்ததுபோல் இருக்கும். சரி அவசரத்துக்கு உப்புமா செய்தால் மொத்த குடும்பமும் என்ன உப்புமாவா என்று முகம் சுளிக்கும். அப்போது குடும்பத் தலைவிக்கு கோபம் தலைக்கு ஏறும். அடுத்த இரண்டு நாள் சாப்பாட்டில் அது நிச்சயம் பிரதிபலிக்கும். இவை எல்லாம் தீர இதோ உங்கள் காலை டிஃபன் மெனுவில் சேர்த்துக் கொள்ள இன்னொரு ரெஸிபி.
கோதுமை ரவை பொங்கல் தென்னிந்தியாவில் கொஞ்சம் பிரபலமான உணவுதான். இதனை டாலியா பொங்கல் என்று சொல்கிறார்கள்.
தேவையான பொருட்கள்
அரை கப் கோதுமை ரவை
பாசிப் பயிறு 1 டீஸ்பூன்
1 டீஸ்பூன் சீரகம்
1 டீஸ்பூன் மிளகு
1 டேபிள் ஸ்பூன் முந்திரிப் பருப்பு
இஞ்சி துருவியது.
பெருங்காயம்
கறிவேப்பிலை
உப்பு
பொங்கல் செய்வது எப்படி?
1. ரவையையும் பருப்பையும் அலசி கொள்ளவும்
2. குக்கரில் கோதுமை ரவை, பாசிப் பயிறு இரண்டு வெவ்வேறு பாத்திரங்களில் வைத்து வேக வைக்கவும்.
3. பருப்பில் ஒரு ஸ்பூன் நெய், கொஞ்சம் மஞ்சள் தூள், பெருங்காய தூள் போட்டு வேகவைத்துக் கொள்ளவும்.
4. ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அதில் முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
5. வறுத்த முந்திரிய தனியாக எடுத்துக் கொள்ளவும்.
6. அதே நெய்யில் கறிவேப்பிலை, சீரகம், மிளகு, இஞ்சி போடவும்.
7. அந்தப் பாத்திரத்தில் வேகவைத்த கோதுமை ரவை, உப்பு சேர்க்கவும்.
8. இப்போது முந்திரியும் நெய்யும் சேர்க்கவும்.
9. ஆரோக்கியமான சுவையான கோதுமை ரவை பொங்கல் தயார்.
View this post on Instagram