Diet Plan | 20 - 20 டயட் ப்ளான் என்றால் என்ன? மருத்துவர் ஃபில் க்ரா சொன்னது என்ன?
தன்னுடைய அனுபவத்தை வைத்து பல ஆலோசனைகள் செய்து, 20 முக்கிய சக்திவாய்ந்த உணவுகளைக்கொண்டு இந்த உணவு முறையை அறிமுகப்படுத்தினார்
மருத்துவர் பில் என்பவர் இந்த 20/20 உணவு முறையை அறிமுகம் செய்திருந்தார். உடல் எடை குறைப்பதற்கு, தன்னுடைய அனுபவத்தை வைத்து பல ஆலோசனைகள் செய்து 20 முக்கிய சக்தி வாய்ந்த உணவுகளை கொண்டு இந்த உணவு முறையை அறிமுகப்படுத்தினார். ஏதோ கேட்க நம்ம ஊரு 20-20 மேட்ச்சை நினைவுபடுத்தினாலும், இது என்ன உணவு முறை என இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
டாக்டர் பில் மெக்ரா - டாக்டர் பில் என அழைக்கப்படுபவர் - இவர் மருத்துவ உளவியலில் பி.எச்.டி பட்டம் பெற்றவர். 2015-ஆம் ஆண்டில், "20/20 டயட் : உங்கள் எடை இழப்பு பார்வையை யதார்த்தமாக மாற்றுங்கள்" என்ற புத்தகத்தை வெளியிட்டார். 20/20 உணவு என்பது உணவின் வெப்ப நிலையை அடிப்படையாகக் கொண்டது, இது உங்கள் உடல் உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை ஜீரணிக்க, உறிஞ்சி, பயன்படுத்த கலோரிகளின் எண்ணிக்கையாகும்.
20/20 உணவு நான்கு முக்கிய கட்டங்களைக் கொண்டுள்ளது:
5 நாள் ஊட்டம் அளித்தல் (கட்டம் 1),
5 நாள் நீடித்தல் (கட்டம் 2),
20 நாள் அடைதல் (கட்டம் 3) மற்றும்
மேலாண்மை (கட்டம் 4).
கட்டம் 1: 5 நாள் ஊட்டம் அளித்தல்
கட்டம் 1 20/20 உணவின் மிகவும் கடினமான கட்டமாக கருதப்படுகிறது. இந்த கட்டத்தில், எடை குறைப்பு செயல்முறையைத் தொடங்க உதவும் என்று நம்பப்படும் 20 சக்தி உணவுகளை மட்டுமே நீங்கள் சாப்பிட வேண்டும். இவை பின்வருமாறு.,
பாதாம், ஆப்பிள்கள், சுண்டல், தேங்காய் எண்ணெய், உலர்ந்த பிளம்ஸ், முட்டை, கிரீன் டீ, கீரைகள், பயறு, கடுகு, ஆலிவ் எண்ணெய், வேர்க்கடலை வெண்ணெய், பிஸ்தா, கொடிமுந்திரி, திராட்சையும், கம்பு, டோஃபு, மோர், சத்துமாவு, தயிர் குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு இந்த கட்டத்தை நீங்கள் பின்பற்ற வேண்டும். கூடுதலாக, 4 மணிநேரத்திற்கு ஒரு முறை சாப்பிட வேண்டும்.
கட்டம் 2: 5 நாள் நீடித்தல்
கட்டம் 2 சில உணவு தளர்வுகளை வழங்குகிறது. இந்த 20 சக்தி உணவுகளை கொஞ்சம் குறைத்து நமக்கு பிடித்த சில உணவுகளை சேர்த்துகொள்ள வழங்குகிறது. 5 நாட்களுக்கு இந்த கட்டத்தை பின்பற்ற வேண்டும்.கட்டயாம் சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகள் என்னவென்றால், சிவப்பு அரிசி,கேரட், முந்திரி, சிக்கன், காளான்கள், ஓட்ஸ்
கட்டம் 3: 20 நாள் அடைதல்
மூன்றாம் கட்டத்தின்போது, பெரும்பாலான உணவுகளை உங்கள் உணவில் மீண்டும் அறிமுகப்படுத்தி கொள்ளலாம். அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் எளிய கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகளை வழக்கமாக உட்கொள்வது ஊக்கமளிக்கிறது. இந்த கட்டத்தில் அறிமுகப்படுத்த சிறந்த உணவுகள் என்னவெனில் வெண்ணெய்,கருப்பு பீன்ஸ்,உருளைக்கிழங்கு,கீரை என்பதாகும்
கட்டம் 4: மேலாண்மை
முதல் மூன்று கட்டங்களை முடித்த பிறகு, குறைந்த எடையை அப்படியே தக்கவைத்து கொள்ளவும், மேலும் சீராக எடை குறையவும் வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்ற வேண்டும். இதுதான் 20: 20 உணவு முறை. மேலே குறிப்பிட்ட உணவுகளை எடுத்து கொண்டு எடையை குறைத்து சரியான வாழ்வியல் முறையை பின்பற்றி உண்டால் எடையை குறைக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இது 20-20 உணவுமுறையைக் குறித்த விளக்கம் மட்டுமே. பரிந்துரை அல்ல. மருத்துவர்களின் ஆலோசனையின்றி உடல் எடை குறைப்புக்கான முறைகளை பின்பற்றுவது ஆபத்தை விளைவிக்கலாம்.