St Thomas Mount Railway Station: சென்னையின் புதிய போக்குவரத்து மையம்.. ஏர்போர்ட் லெவலுக்கு மாறும் பரங்கிமலை ரயில் நிலையம்..!
Parangi Malai Railway Station : " சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் மேம்பாட்டு பணிகள், 14.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்ற வருகிறது"

St Thomas Mount Railway Station Redevelopment Project: "சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் வருகின்ற மார்ச் மாதம் இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது"
சென்னை மின்சார ரயில் சேவை - Chennai Electric Trains
சென்னையின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரயில் போக்குவரத்து இருந்து வருகிறது. மிகவும் குறைந்த விலையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல், மின்சார ரயில் போக்குவரத்தை பயன்படுத்த முடியும் என்பதால், பொதுமக்கள் இடையே மின்சார ரயில் போக்குவரத்து வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை உள்ள வழித்தடத்தில், பல ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் பயணித்து வருகின்றனர்.
பரங்கிமலை ரயில் நிலையம்
சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை உள்ள வழித்தடத்தில், மிக முக்கியமான ரயில்வே நிலையமாக பரங்கிமலை ரயில் நிலையம் (செயிண்ட் தாமஸ் மவுண்ட்) இருந்து வருகிறது. சென்னையில் உள்ள முக்கியமான வணிகங்கள் நடைபெறும் பகுதிக்கு இந்த ரயில் நிலையத்திலிருந்து செல்ல முடியும் என்பதால், இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதன் அருகே புகழ் பெற்ற செயிண்ட் தாமஸ் சர்ச் இருப்பதால், ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட அதிக அளவு பயணிகள் வந்து செல்கின்றனர். சென்னையின் மெட்ரோ போக்குவரத்து இணைக்கக்கூடிய, ரயில் நிலையமாகவும் உள்ளது. மெட்ரோவை பயன்படுத்த விரும்புபவர்கள், பரங்கிமலை ரயில் நிலையம் வரை வந்து அங்கிருந்து, சென்னை விமான நிலையம் மெட்ரோ மூலம் சென்னையின் பிற பகுதிக்கு செல்கின்றனர்.
இதையும் படிங்க: Chennai Metro: சென்னை மெட்ரோ! கொளத்தூர் - OMR.. டிராஃபிக்கில் சிக்க வேண்டாம்! இனி ஈசியாக போகலாம்..
புதுசா மாறும் ரயில் நிலையம்
தினமும் பரங்கிமலை ரயில் நிலையத்தை 201 மின்சார ரயில்கள் கடந்து செல்கின்றன. தொடர்ந்து இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்துபவர்களின், எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வருங்காலங்களில் கூடுதலாக, இந்த ரயில் நிலையத்தில் பயணிகள் பயன்படுத்துவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் நிலையத்திற்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

பரங்கிமலை ரயில் நிலையத்தின் வசதிகளை மேம்படுத்த, தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இந்தியா முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களை மறு சீரமைக்கும் வகையில், "அம்ரித் பாரத்" என்ற ரயில் நிலையின் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பரங்கிமலை ரயில் நிலையத்தை, மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. பரங்கிமலை ரயில் நிலையத்தை மேம்படுத்த சுமார் ரூபாய். 14.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க : Chennai Metro: 21.76 கி.மீ, 19 ரயில் நிலையங்கள்.. பட்டாபிராமிற்கு இனி மெட்ரோவில் போகலாம்.. மொத்தம் எத்தனை கோடி?
சிறப்பம்சங்கள் என்னென்ன?
பயணிகளின் வருகை மற்றும் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு, ரயில் நிலையத்தில் நுழைவு வாயில்கள் விரிவு படுத்தப்படுகின்றன. புதிய டிசைன்கள் அமைக்கப்பட்டு, மக்களை கவரும் வகையில் வடிவமைப்புகள் அமைக்கப்பட உள்ளன. பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நவீன சி.சி.டி.வி கேமராக்கள் அமைக்கப்பட உள்ளன.

புதிய புக்கிங் அலுவலகம் மற்றும் நவீன வசதிகளுடன் புக்கிங் அலுவலகம் செயல்பட உள்ளன. நடைமேடைகளை பொருத்தவரை, கூடுதலான இருக்கை வசதிகள் மற்றும் புதிய இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன. பார்க்கிங் இடமும் அதிகரிக்கப்பட உள்ளன. பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் பல்வேறு இடங்களில், டிஜிட்டல் பலகைகள் அமைக்கப்பட உள்ளன.
செயல்பாட்டிற்கு வருவது எப்போது?
கடந்த சில மாதங்களாக இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ரயில் நிலைய புதுப்பிக்கும் பணிகள் பெரும்பாலானவை நிறைவடைந்து இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். வருகின்ற மார்ச் மாதம் இறுதிக்குள் அல்லது ஏப்ரல் முதல் வாரத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















