மேலும் அறிய
C.V Shanmugam : விளம்பரம் மட்டும் தான்! வேற ஒன்னும் நடக்கவில்லை ; கொந்தளித்த சிவி சண்முகம்
C.V Shanmugam : மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கிவிட்டு ஒருபக்கம் டாஸ்மாக்கிலும் மறுபக்கம் சினிமா தியேட்டர்களிலும் வசூலிப்பதாக சிவி சண்முகம் குற்றச்சட்டு

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்
Source : ABP NADU
விழுப்புரம் : திமுக ஆட்சியில் விளம்பர மாடல் மட்டும் தான் நடைபெறுகிறது வேறொன்றும் நடைபெறவில்லை என்றும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கிவிட்டு ஒருபக்கம் டாஸ்மாக்கிலும் மறுபக்கம் சினிமா தியேட்டர்களிலும் வசூலிப்பதாக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முக தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகேயுள்ள பெரும்பாக்கத்தில் அ.இ.அ.தி.மு. க கிழக்கு ஒன்றியம் சார்பில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கு விழா நடைப்பெற்றது . இதில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதிமுக போராடும்:
அப்போது மேடையில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சனைக்காக போராடுகிற இயக்கமாக அதிமுக உள்ளதாகவும், அதிமுகவில் தலைவர்கள் பிறந்த நாள் என்றால் மக்களுக்கு எதையாவது செய்வோம் ஆனால் திமுக போன்ற கட்சிகள் வசூலிக்கும் கட்சியாக உள்ளது என்றும் திமுக ஆட்சிக்கு வந்து 4 வருடங்கள் ஆகின்றது இந்த நான்கு வருடங்களில் பால் விலை, மின்சாரம், சிமெண்ட், ஜல்லி, போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி அதிகரித்துள்ளது. ஆனால் கூலி தொழிலாளர்களின் கூலி உயரவில்லை வீட்டிற்கு பயன்படுத்துகிற குடிநீருகான வரி பெண்களின் கணவர்கள் குடிக்கும் மதுவின் விலையும் தான் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: மங்கள்யான்-2 திட்டத்தில் இஸ்ரோ.! பிரதமர் மோடியின் ஒப்புதலுக்கு காத்திருப்பு..திட்டம் என்ன?
ஊழல் தான் மலிந்திருக்கிறது:
”திமுக ஆட்சியின் சாதனை விலைவாசி உயர்வு ஊழல் தான் மலிந்திருக்கிறது என்றும் எதை கேட்டாலும் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக தெரிவிக்கின்றனர் தாலிக்கு தங்கம், லேப்டாப் திட்டம் போன்ற அதிமுக ஆட்சியின் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கிவிட்டு ஒருபக்கம் டாஸ்மாக்கிலும் மறுபக்கம் சினிமா தியேட்டர்களிலும் வசூலிப்பதாக குற்றஞ்சாட்டினார். ”
விளம்பர மாடல்:
”பெண்களுக்கு இலவச பயணத்தை கொடுத்துவிட்டு ஓசில போறாங்கனு சொல்லும் நிலை உள்ளதாகவும் அரசு பேருந்துகள் அனைத்தும் மழையில் ஒழுகுவதாகவும், திமுக ஆட்சியில் விளம்பர மாடல் மட்டும் தான் நடைபெறுகிறது வேறொன்றும் நடைபெறவில்லை என குற்றஞ்சாட்டினார். ”
புதியதாக அப்பா வந்துள்ளதாகவும், அப்பா தான் வீட்டுவரி பால்விலை, மின்சார கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார். சொந்த அப்பா, அம்மாவிற்கு உணவளிக்காமல் அப்பா என ஸ்டாலினை அழைப்பதாகவும் யாருக்கும் நன்றியில்லாத ஆட்சியாகவும் ஸ்டாலின் குடும்பம் நன்மை பெற இந்த ஆட்சி நடைபெறுவதாக கூறினார். இந்த ஆட்சியில் எந்த வளர்ச்சியும் திட்டமும் இல்லை தாய்மார்கள் கையில் தான் ஒரு ஆட்சி வருவதும், தூக்கி எரிவது, செய்ய முடியும் என சிவி சண்முகம் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
தமிழ்நாடு
பட்ஜெட் 2025
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion