Job Fair: TCS நிறுவனத்தில் வேலை; மிஸ் பண்ணிடாதீங்க...! முழு விவரம் இதோ !
Puducherry Job Fair 2025: வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 8, 2025 அன்று காலை 10.00 முதல் 02.00 மணி வரை புதுச்சேரியில் நடைபெறவுள்ளது.

புதுச்சேரி: அனைத்து சமூகத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் டாடா கன்சல்டண்சி நிறுவனத்தின் மூலம் வரும் 8 ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் மற்றும் நவயுகா கன்சல்டன்சி சேவை மையமும் இணைந்து நடத்தும் அனைத்து சமூகத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் (TATA Consultancy Service) பிரஞ்சு ட்ரான்ஸ்லேடேர் (French Translator) நிரந்தர பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் 8 மார்ச் 2025 அன்று காலை 10.00 முதல் 02.00 மணி வரை புதுச்சேரியில் நடைபெறவுள்ளது.
20க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்
இந்த வேலை வேலைவாய்ப்பு முகாமில் 20 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்புவதற்காக FRENCH LANGUAGE DELF B1 UG/PG படித்து முடித்த இளைஞர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.
வயது வரம்பு
18 முதல் 35 வயது நிரம்பியவர்கள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்குபெறலாம். சென்னை மற்றும் இந்தோரில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம்.
இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது தற்குறிப்பு (Resume) மற்றும் கல்வி தகுதிக்கான உண்மை நகல் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறும்படி கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்:
அலையன்ஸ் பிரான்க்கேஸ் டி புதுச்சேரி, எண்: 58, சப்பிரான் தெரு, வைட் டவுன், புதுச்சேரி-01. Alliance Francaise de Pondicherry, No. 58, suffren street, white Town, Puducherry - 01.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

