மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்...என்ன தெரியுமா..?

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 25 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பேருந்து வசதி இல்லாத பகுதிகளில் புதிதாக 25 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அதற்காக பேருந்து சேவை வழங்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மினி பேருந்து விரிவாக்க திட்டம் 

மினி பேருந்திற்கான புதிய விரிவான திட்டம் 2024, அரசாணை எண்.33, உள் (போக்குவரத்து-1) துறை, நாள்.23.01.2025-ன் படி, பொது மக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களை கொண்ட கிராமங்கள், குக்கிராமங்கள், குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு எந்த பாதையும் இணைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், பொருளாதார மற்றும் ஒழுங்கான ஒருங்கிணைந்த சாலைப் போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பேருந்து சேவை தொடங்க விதிமுறைகள் 

அதனைத் தொடர்ந்து இந்த “புதிய விரிவான மினிப்பேருந்துக்கான திட்டம் 2024" வெளியீடு உடனடியாக அமலுக்கு வருகிறது. மேலும், தமிழ்நாடு மாநிலத்தில் மினிப்பேருந்திற்கான கட்டண திருத்தமும் 01.05.2025 முதல் நடைமுறைக்கு வருகிறது.

இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாக, அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் அதிகபட்ச நீளம் 25 கி.மீ. ஆகும். குறைந்தபட்ச சேவை செய்யப்படாத (Minimum Un- served Route Length) பாதை நீளம், மொத்த பாதையின் நீளத்தில் 65% க்கு குறைவாக இருக்க கூடாது. தொடக்கம் - முனையப்புள்ளி என்பது சேவை செய்யப்படாத குடியிருப்பு, கிராமம் ஆகியவற்றின் பேருந்து நிறுத்தம் அல்லது பேருந்து நிலையம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு இடமாக இருக்க வேண்டும்.

முக்கிய இடங்கள் 

முனையப்புள்ளியில் இருந்து அடுத்த 1 கி.மீ. தூரத்தில் அரசு மருத்துவமனை, மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, இரயில் நிலையம், உழவர் சந்தை, வேளாண் ஒழுங்குமுறை சந்தை, ஆட்சியர் அலுவலகம், தாலுக்கா அலுவலகம், புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்கள் அல்லது பேருந்து நிலையத்திற்கு சற்று முன்பு உள்ள இடம் மற்றும் வழங்கப்பட்ட பாதை அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட பாதை நீளத்தை விட (25கி.மீ) அதிகமாக இருக்கும்பட்சத்தில், வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மற்ற பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசித்து (அதாவது போக்குவரத்து கழகம், உள்ளாட்சி அமைப்புகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆகியோருடன் ஆலோசித்து) மேற்கூறிய இடங்களில் பயணிகள் பயனடையும் வகையில் சேவை பகுதியில் 1.கி.மீ வரை கூடுதல் தூரத்தை அனுமதிக்கப்படும். மேற்கூறிய இடங்களை தவிர மற்ற இடங்களுக்கு இது பொருந்தாது. 

பழைய மினி பேருந்து திட்டத்தில் உள்ளவர்கள் 

பழைய மினி பேருந்து திட்டத்தின் கீழ் ஏற்கனவே அனுமதி பெற்ற உரிமையாளர்கள், இப்புதிய திட்டத்தின் கீழ் மாறுவதற்கு எழுத்துபூர்வமாக விருப்பத்தினை அளித்து, பழைய அனுமதிச்சீட்டினை ஒப்படைக்க வேண்டும். இப்புதிய திட்டத்தில், குறைந்தபட்சம் 1.5 கி.மீ கூடுதல் சேவை செய்யப்படாத பாதையாக (Unserved Route) இருக்க வேண்டும். மினிப்பேருந்து இருக்கைகள் (ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருக்கைகள் தவிர்த்து) 25 ஆக இருக்க வேண்டும். மேலும் மினிப்பேருந்தின் Wheel Base 390 cm-க்கு மிகாமல் இருக்க வேண்டும். நிலைப்பேருந்து அல்லது மினிப்பேருந்துகள் 4 நடைகளுக்கு குறைவாக இயக்கப்படும் பகுதிகள் சேவை செய்யப்படாத பாதையாக (Unserved Route) கருதப்படும்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய வழித்தடங்கள் 

மயிலாடுதுறை மாவட்டத்தில், இந்த 'மினிப்பேருந்து புதிய விரிவான திட்டம் 2024"-ன் கீழ் மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலரால் 25 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, மாவட்ட அரசிதழ் எண்.1 மற்றும் 2-ல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள 25 புதிய வழித்தடங்களுக்கு அனுமதி கோர விருப்பம் உள்ள பொதுமக்கள், மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் 15.03.2025-க்குள் உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
1.70 கோடி ரூபாய் TAMCO கடன்: மயிலாடுதுறையில் மாஸ் காட்டிய சிறுபான்மையினர் நலத்துறை!
1.70 கோடி ரூபாய் TAMCO கடன்: மயிலாடுதுறையில் மாஸ் காட்டிய சிறுபான்மையினர் நலத்துறை!
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
கர்நாடகாவுக்கு பதிலடி? மயிலாடுதுறையில் கரைபுரண்டு ஓடப்போகும் செயற்கை பக்தி வெள்ளம்!
கர்நாடகாவுக்கு பதிலடி? மயிலாடுதுறையில் கரைபுரண்டு ஓடப்போகும் செயற்கை பக்தி வெள்ளம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget