மேலும் அறிய

இஸ்ரோவின் SPADEX திட்டம் வெற்றி: விண்வெளியில் பறக்க தயாராகும் மனிதன்!

ISRO Spadex Successfully Undocking : இஸ்ரோ SDX-1 மற்றும் SDX-2 ஆகிய 2 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக பிரித்து மகத்தான சாதனையை படைத்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) அன்டாக்கிங் பரிசோதனையை இன்று வெற்றிகரமாக முடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.  இது சந்திரயான் 4 மற்றும் ககன்யான் மற்றும் விண்வெளி நிலையம் அமைத்தல் உள்ளிட்ட எதிர்கால திட்டங்களுக்கு பாதை அமைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அண்டாக்கிங் வெற்றி

செயற்கைக்கோள் 1 ( SDX-1 ) மற்றும் செயற்கைக்கோள் 2 ( SDX-2 ) ஆகிய இரண்டிற்கும் இறுதி டிகாப்சர் கட்டளை வழங்கப்பட்டது, இதையடுத்து இரண்டு செயற்கைக்கோள்களையும் சீராகவும் துல்லியமாகவும் பிரிக்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டும் செயற்கைக்கோள்களும் பிரிந்து செல்லும் காட்சியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்த காட்சியானது, விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியாவின் மேம்பட்ட திறன்களைக் காண்பிக்கும் வகையில், பரிசோதனையின் வீடியோ இருக்கிறது என பலர் கருத்து தெரிவிக்கின்றனர். 

அமைச்சர் ஜிதேந்திர சிங் வாழ்த்து:

மத்திய விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், இஸ்ரோவின் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் தெரிவித்துள்ளதாவது, “ ஒவ்வொரு இந்தியருக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. செயற்கைக்கோள்கள் நம்பமுடியாத அளவிற்கு டாக்கிங்கை  ( இரண்டு செயற்கைக்கோள்களை இணைத்தல் ) மற்றும் அன்டாக்கிங் ( 2 செயற்கைக்கோள்களை பிரித்தல் )  பணியை செய்துள்ளன.

இது லட்சிய திட்டமான சந்திரயான் 4 மற்றும் ககன்யான் உள்ளிட்ட எதிர்கால விண்வெளி பயணங்களுக்கும் வழி வகுக்கும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஸ்பேடக்ஸ் திட்டம் மூலம் 2 செயற்கைக்கோள்களை இணைத்து பரிசோதனை முயற்சியில் வெற்றியடைந்துள்ளது. உலகில் இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே, இரண்டு செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைக்கும் திறனைக் கொண்டுள்ளன. இந்நிலையில் ,நான்காவது நாடாக அந்த சாதனையை படைத்திருக்கிறது இந்தியா.

Also Read: Lunar Eclipse: சிவப்பாக மாறப்போகும் இரவு: வருடத்தின் முதல் சந்திர கிரகணம்: எப்போது?

ஸ்பேடக்ஸ் திட்டம்:

இந்தியாவின் விண்வெளித் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் போற்றப்படும் SpaDeX திட்டமானது, விண்வெளியில் தனித்தனியே சுற்றி வரும் இரண்டு செயற்கைக்கோள்களை இணைக்கும் இஸ்ரோவின் திட்டமாகும். மனித விண்வெளிப் பயணத்திற்கான முக்கியமான தொழில்நுட்பம், செயற்கைக்கோள் சேவை மற்றும் எதிர்காலப் பணிகளான ககன்யான் திட்டம் மற்றும் இந்தியாவிற்கான விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை நிறுவுதல் போன்றவற்றில் நாட்டின் திறனை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  2035க்குள் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம் அமைப்பதற்கும் SpaDeX  முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Also Read: சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

உத்தரகாண்ட்: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - பயணித்த 6 பேரும் உயிரிழந்த சோகம்!
உத்தரகாண்ட்: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - பயணித்த 6 பேரும் உயிரிழந்த சோகம்!
IBPS வேலைவாய்ப்பு 2026: மும்பையில் புதிய பணியிடங்கள்! விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
IBPS வேலைவாய்ப்பு 2026: மும்பையில் புதிய பணியிடங்கள்! விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
கர்நாடகாவில் அடுத்தடுத்த அதிர்ச்சி ! பால் விலையைத் தொடர்ந்து பேருந்து கட்டணமும் உயர்வு?
கர்நாடகாவில் அடுத்தடுத்த அதிர்ச்சி ! பால் விலையைத் தொடர்ந்து பேருந்து கட்டணமும் உயர்வு?
நடைபாதைகளில் வாகனங்களை ஓட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்க திட்டம்!
நடைபாதைகளில் வாகனங்களை ஓட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்க திட்டம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
"ஸ்டாலினுக்கு பெருந்தன்மை அதிகம்" திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தா ஏத்துப்பேன் - சீமான் ஓபன் டாக்
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது அதிரடி ஆக்சன்: மயிலாடுதுறையில் தொடரும் குண்டர் சட்ட நடவடிக்கை!  
பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது அதிரடி ஆக்சன்: மயிலாடுதுறையில் தொடரும் குண்டர் சட்ட நடவடிக்கை!  
குரு பெயர்ச்சி பலன்கள்.. இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... உங்க ராசிக்கு யோகமா? சோதனையா?
குரு பெயர்ச்சி பலன்கள்.. இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... உங்க ராசிக்கு யோகமா? சோதனையா?
லிட்டருக்கு 56.2 கிமீ மைலேஜ்.. ரூ.76,400-க்கு மாஸான ஹீரோவின் புது ஸ்கூட்டர் அறிமுகம் - சீட் எவ்வளவு பெருசு தெரியுமா?

Embed widget