"எனக்கு பிடிக்கல" கலர் பூச வந்தவர்களை தடுத்து நிறுத்திய இளைஞர்.. ஹோலி கொண்டாட்டத்தில் விபரீதம்!
ராஜஸ்தானில் தன் மீது ஹோலி கலர் பூச வந்தவர்களை தடுத்து நிறுத்திய இளைஞரை அவர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் தன் மீது ஹோலி கலர் பூச வந்தவர்களை தடுத்து நிறுத்திய இளைஞரை அவர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை நாடு முழுவதும் ஹோலி கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ஹோலி கொண்டாட்டத்தில் விபரீதம்:
வண்ணங்களின் பண்டிகை - ‘ஹோலி’. நாடு முழுவதும் கொண்டப்படும் பிரசித்திபெற்ற பண்டிகைகளுள் ஒன்று. மகிழ்ச்சியும் குதுகலமும் நிறைந்த பண்டியை கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்த்து காத்திருப்பதும் உண்டு.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் தன் மீது ஹோலி கலர் பூச வந்தவர்களை இளைஞர் ஒருவர் தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் ஹோலி கலர் பூச வந்தவர்கள் கோபம் அடைந்து, அந்த இளைஞரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை ரால்வாஸ் கிராமத்தில் நடந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "அசோக், பப்லு மற்றும் கலுராம் ஆகியோர் உள்ளூர் நூலகத்திற்குச் சென்று அங்கு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்த ஹன்ஸ்ராஜின் மீது வண்ணம் பூச முயற்சித்துள்ளனர்.
இளைஞர் கொலை:
ஹன்ஸ்ராஜ் மீது வண்ணம் பூச மறுத்ததால், மூவரும் அவரை உதைத்து, பெல்டால் தாக்கினர். பின்னர், அவர்களில் ஒருவர் அவரை கழுத்தை நெரித்து கொன்றார். பின்னர், கோபமடைந்த குடும்பத்தினரும் கிராம மக்களும் ஹன்ஸ்ராஜின் உடலுடன் தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தினர். இன்று அதிகாலை 1 மணி வரை இந்தப் போராட்டம் தொடர்ந்தது.
போராட்டக்காரர்கள் ஹன்ஸ்ராஜின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். காவல்துறையினரின் உறுதிமொழிக்குப் பிறகு, உடல் இறுதியாக நெடுஞ்சாலையில் இருந்து அகற்றப்பட்டது.
இதையும் படிக்க: IIT hyperloop: சாதிக்கும் ஐஐடி சென்னை.. ஹைப்பர் லூப் டெக்னாலஜிக்காக, ஓடி வரும் வெளிநாட்டு நிறுவனங்கள்





















