Students with PMK Flag : ஆண்டு விழாவா?கட்சிக்கூட்டமா?பாமக துண்டுடன் மாணவர்கள் சாதி பாடலுக்கு நடனம்
காவேரிப்பட்டினம் அருகே அரசு பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பாமக கட்சித்துண்டை கழுத்தில் போட்டு மாணவர்கள் நடனம் ஆடியது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள சோப்பனூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 39 பேருக்கு மேல் படித்து வரும் நிலையில் இந்தப் பள்ளியில் நேற்று மாலை பள்ளிஆண்டு விழா நடைபெற்ற உள்ளது. இந்த ஆண்டு விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் நாடகம் உள்ளிட்டவை நடைபெற்றது. இந்நிலையில் மாணவர்களின் நடன நிகழ்ச்சியில் படையாட்சி என்ற பாடலுக்கு பாமக கட்சியின் துண்டை மாணவர்கள் கழுத்தில் போட்டு நடனம் ஆடியுள்ளனர். இந்த நிலையில் அதனைக் கண்ட பள்ளியில் படித்து வரும் மற்றொரு தரப்பு மாணவர்களின் பெற்றோர். எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அடுத்த பள்ளி வாசலில் பெற்றோர்கள் சிலர் கூடி எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த நாகரசம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் சங்கீதா பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பெயரில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.





















