Jobs: இந்தியாவில் அடுத்த 6 மாதங்களில் வேலையை கைவிடும் 86% ஊழியர்கள் - அதிர்ச்சியளித்த ஆய்வறிக்கை
இந்தியாவில் அடுத்த 6 மாதங்களில் 86 சதவிகிதம் பேர் பணியை விட உள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அடுத்த 6 மாதங்களில் 86% ஊழியர்கள் தங்களுடைய வேலையை விட திட்டமிட்டுள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மைக்கேல் பேஜ் என்ற வேலைவாய்ப்பு நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி இந்தியாவில் அடுத்த 6 மாதங்களில் பலர் தங்களுடைய தற்போதைய பணியிலிருந்து மாற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டு காலமாக சிலர் வேலையை விட்டு வருவது இந்தாண்டும் அதிகரிக்கும் என்று இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவில் அடுத்த 6 மாதங்களில் இது வேகமாக அதிகரிக்கும் என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இந்தியாவில் 61% சதவிகிதம் பேர் தங்களுடைய வேலை மற்றும் வாழ்க்கையை சமமாக பார்க்க குறைந்த சம்பள வேலைக்கு செல்ல விரும்புவதாகவும் இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக நிறுவனங்கள் அளித்துள்ள இந்த ஹைபிரிட் மாடல் மற்றும் வோர்க் ஃபரம் ஹோம் காரணமாக 11% ஊழியர்கள் தங்களுடைய வேலையை விட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பணியை ஊழியர்கள் விட காரணம் என்ன?
ஊழியர் மற்றும் நிறுவனத்திற்கும் இடைவெளி:
ஊழியர்கள் சிலர் தங்களுடைய வேலையை விட காரணமாக இந்த அறிக்கை சில விஷயங்களை முன்வைத்துள்ளது. அதன்படி ஊழியர்களின் தேவையை நிறுவனங்கள் உணர்ந்து கொள்ளாதது முக்கியமான காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. அதாவது ஊழியர்கள் நிறுவனத்தின் தரத்தை பார்த்து வேலை பார்த்து வருவதாக நிறுவனங்கள் 110% நம்பி வருகின்றன.
ஆனால் அவை முற்றிலும் தவறான ஒன்று இந்த அறிக்கை கூறியுள்ளது. இது ஊழியர்களின் தேவைக்கும் நிறுனத்திற்கும் இருக்கும் மிகப்பெரிய இடைவெளியாக கருதப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளை பணியை விடும் ஊழியர்கள் தங்களுக்கு சரியான இடத்தில் நல்ல வேலையை தேட மட்டுமே முயற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளனர். ஆகவே அவர்கள் நிறுவனத்தின் தரம் தொடர்பாக எந்தவித முக்கியத்துவமும் அளிக்கவில்லை என்று கருதப்படுகிறது.
மேலும் படிக்க:எஸ்.பி.ஐ. அறிவித்திருந்த 641 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்