மேலும் அறிய

கோவை மாஸ்டர் பிளானில் மறைந்திருக்கும் மெகா பிசினஸ்! தொழில் வளர்ச்சிக்கு இது எப்படி உதவும்?

ஹோட்டல்களின் எண்ணிக்கையும் மூன்று மடங்காக அதிகரிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதை மாஸ்டர் பிளான் மூலம் தமிழக அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

வரும் 2041 ஆம் ஆண்டில் கோவை வளர்ச்சியைக் கணித்து, கோவைக்கான முழுமைத்திட்டம் (Master Plan 2041) தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை 3 அன்று வெளியிட்ட இந்த திட்டத்தின் சுருக்கம் தற்போது வெளியாகியுள்ளது.

கோவை மாஸ்டர் பிளானில் மறைந்திருக்கும் மெகா பிசினஸ்! தொழில் வளர்ச்சிக்கு இது எப்படி உதவும்?

அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய முழுமைத் திட்டம், அரசிதழில் வெளியிடப்பட்ட பின், ஒரு வாரத்துக்குள் நகர ஊரமைப்புத்துறை தளத்தில் வெளியிடப்படுமென்று நகர ஊரமைப்பு இயக்குநர் கணேசன் தெரிவித்தார். புதிய மாஸ்டர் பிளான் வெளியீட்டை கோவை தொழில் அமைப்புகள் வரவேற்றுள்ளன. அதேநேரத்தில், பழைய மாஸ்டர் பிளானில் இருந்த 136 திட்டச்சாலைகளை கைவிட்டிருப்பதற்கு எதிர்ப்பும் எழுந்துள்ளது

கோவை பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்த மாஸ்டர் பிளானை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அந்த இரண்டாவது மாஸ்டர் பிளானில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன குறிப்பாக அதில் வரும் 2041 ஆம் ஆண்டில் கோவை மாநகரின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ஓட்டல்களின் வளர்ச்சியும் கணக்கிடப்பட்டுள்ளது. கோவை மாநகரம் தொழில் நகரம் மட்டுமின்றி சுற்றுலா மையமாகவும் இருந்து வருகிறது. தொழில் நிமித்தமாகவும், சுற்றுலா நிமித்தமாகவும் பல்வேறு வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் கோவை வந்து செல்கின்றனர். வால்பாறை, டாப்ஸ்லீப், நீலகிரி, ஆழியாறு, பொள்ளாச்சி என ஏராளமான சுற்றுலா மையங்கள் இங்கு கொட்டிக் கிடக்கின்றன. இது தவிர முக்கிய தொழில் கேந்திரமாகவும் கோவை இருக்கும் நிலையில் கடந்த ஆண்டில் மட்டும் கோவை மாவட்டத்திற்கு 77.6 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கோவை மாஸ்டர் பிளானில் மறைந்திருக்கும் மெகா பிசினஸ்! தொழில் வளர்ச்சிக்கு இது எப்படி உதவும்?

தற்போதைய சூழலில் கோவை மாவட்டத்தில் மூன்றாயிரம் ஹோட்டல்கள் மட்டும் இருக்கும் நிலையில் 2041 ஆம் ஆண்டில் இதன் தேவை 12,112 ஹோட்டல்களாக இருக்கும் என கோவை மாஸ்டர் பிளானில் கணக்கிடப்பட்டுள்ளது. கோவை மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் இருந்து வரும் நிலையில் நகரின் வளர்ச்சியும் விரிவடைந்து வருகிறது. அவிநாசி சாலை, பாலக்காடு சாலை, சத்தியமங்கலம் சாலை, பொள்ளாச்சி சாலை என முக்கிய சாலைகள் அனைத்தும் விரிவடைந்து வரும் நிலையில், கட்டுமான நிறுவனங்களின் பிரம்மாண்டமான ப்ராஜெக்ட்களும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. மேற்கு புறவழிச் சாலையும் அமைக்கப்பட்டு வருவதன் காரணமாக கோவை நகரின் அனைத்து பகுதிகளும் விரைவாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய நிலையில் ஹோட்டல்களின் எண்ணிக்கையும் மூன்று மடங்காக அதிகரிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதை மாஸ்டர் பிளான் மூலம் தமிழக அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

மூன்று மடங்காக ஹோட்டல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுது அதற்கேற்ற வேலை வாய்ப்புகள் ஏற்படுவதுடன், தரமான தங்குமிட வசதிகளும் சுற்றுலா பயணிகளுக்கும், வெளி மாநிலத்திலிருந்து இங்கு வருபவர்களுக்கும் ஏற்படுத்தி கொடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த 15 ஆண்டுகளில் கோவைக்கு மாஸ்டர் பிளான் மூலம் ஒரு மெகா பிசினஸ் பிளானையும், அதன் மூலம் ஏற்பட இருக்கும் வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாட்டையும் தற்போதே கவனத்தில் கொண்டு மாஸ்டர் பிளான் தமிழக அரசால் கவனத்தில் எடுத்து கொள்ளப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pension : மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Tata Harrier: டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? அப்படி என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்?
டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? ஹாரியரில் என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்
Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Embed widget