’சரத்குமார் பொண்ணா இது...’ முழுசா மாறிய வரலட்சுமியை பாருங்க... இப்போ வேற லெவல்!
Varalakshmi Sarathkumar : வரலக்ஷ்மி சரத்குமார் பல படங்களில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இருப்பினும் அவரின் திறமை முழுமையாக இன்னும் வெளிப்படவில்லை.
Varalakshmi Sarathkumar : செம்ம போட்டோஸ் சூப்பர் போஸ்ட்...ரொம்ப ஸ்லிம் ஆயிட்டீங்களே வரு...
தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் கட்டுமஸ்தான உடல்வாகு கொண்ட கம்பீரமானான ஹீரோக்களில் ஒருவர் நடிகர் சரத்குமார். அவரின் மகள் வரலக்ஷ்மி சரத்குமார் வளர்த்து வரும் ஒரு முன்னணி நடிகை.
தமிழில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக "போடா போடி" திரைப்படம் மூலம் அறிமுகமானவர். அவரின் கலகலப்பான பேச்சு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பெற்றது. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் பல படங்களில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அவரின் திறமை முழுவதுமாக வெளிப்படும் அளவிற்கு இன்னும் ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை.
சில தினங்களுக்கு முன்னர் நடிகர் ராதிகா சரத்குமாரின் பிறந்தநாள் அன்று ஒரு போஸ்ட் ஒன்றை பதிவிட்டார் வரலக்ஷ்மி.
Happpyyyyyy 60th birthday aunty....loveeeee you...u r such an inspiration to us all...age is just a number and you are proof of that..muuahhh..have a good trip aunty..see u soon..muahhh 60 and fabulous..😘😘😘😘 @realradikaa pic.twitter.com/HaU3jBlxYL
— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath5) August 21, 2022
வரு பெற்ற விருதுகள் :
"விக்ரம் வேதா" படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு பெஸ்ட் சப்போர்டிங் நடிகைக்கான விருது கிடைத்தது. "தாரை தப்பட்டை" படத்தில் சிறந்த நடிப்பிற்காக சிறந்த நடிகை கிரிட்டிக்ஸ் என்ற விருதும் பெற்றார் வரலக்ஷ்மி.
அதனை தொடர்ந்து தாரை தப்பட்டை, நிபுணன், மிஸ்டர் சந்திரமௌலி, சண்டைக்கோழி, எச்சரிக்கை, சர்க்கார் மற்றும் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இரவின் நிழல், பொய்க்கால் குதிரை, காட்டேரி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் பல தெலுங்கு படங்களில் நடித்தும் வருகிறார் வரலக்ஷ்மி சரத்குமார்.
சோசியல் மீடியா:
வரலக்ஷ்மி சரத்குமார் எத்தனை பிஸியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ். அவ்வப்போது பல புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அந்த வகையில் தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்து மெல்லிய உடலில் மிகவும் ஸ்லிம்மான போட்டோஷூட் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வரலட்சுமியின் ரசிகர்கள் அதற்கும் லைக்ஸ்களையும், கமெண்ட் மூலமாகவும் தங்களது அன்பை பகிர்ந்து வருகிறார்கள். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#transformation can happen at anytime to anyone..believe in yourself.. don’t let anyone tell you what u can and cannot do..confidence is your best weapon.. challenge yourself.. you are the best competition for yourself.. you will be surprised how much you can achieve.. #believe pic.twitter.com/RzqEyR8e98
— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath5) August 22, 2022
வரு போஸ்ட்:
அந்த புகைப்படங்களை வெளியிட்டு அதற்கு "மாற்றம் என்பது ஒருவர் வாழ்வில் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்களால் எது முடியும் எது முடியாது என்பதை மற்றவர்கள் தீர்மானிக்க அனுமதிக்காதீர்கள். தன்னம்பிக்கை தான் ஒரு சிறந்த ஆயுதம். உங்களுக்கு நீங்களே சவாலாக இருங்கள். உங்களுடைய போட்டியாளர் நீங்கள் தான். அப்போது உங்களுடைய வளர்ச்சி உங்களுக்கே ஆச்சரியத்தை கொடுக்கும்" என்று ஒரு பதிவை போஸ்ட் செய்துள்ளார் வரலக்ஷ்மி சரத்குமார்.