Neeya Naana: ‘எங்க அப்பாவை தான் முதன்முதலா அடிச்சேன்’ - நீயா நானாவில் அதிர்ச்சி கொடுத்த இளைஞர்!
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் கோபிநாத்தை அதிரவைக்கும் அளவுக்கு அதில் பங்கேற்ற இளைஞர் ஒருவர் சொன்ன பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் கோபிநாத்தை அதிரவைக்கும் அளவுக்கு அதில் பங்கேற்ற இளைஞர் ஒருவர் சொன்ன பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நீயா நானா:
காலம் கடந்தாலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு இருக்கும் மவுசு என்றும் குறையாமல் தான் உள்ளது. டிவிக்கே இருக்கும் ரசிகர்கள் தனி என்பதால் பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை மீண்டும் ஒளிபரப்பினால் கூட அதனை பார்ப்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தான் ஒவ்வொரு சேனல்களும் விதவிதமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன.
சீரியல்கள் தான் என்றும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றதாக உள்ளது.ஆனால் அதையும் தாண்டி ஒரு சில ரியாலிட்டி ஷோக்கள் மக்களிடையே நல்ல எண்ணத்தைப் பெற்றுள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நீயா நானா’ என்ற விவாத நிகழ்ச்சி நம்பர் 1 நிகழ்ச்சியாக ரசிகர்களிடத்தில் உள்ளது. வாரம் வாரம் ஏதேனும் ஒரு தலைப்பில் இரு தரப்பு ரசிகர்களையும் கொண்டு விவாதம் செய்வது மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதால் இந்நிகழ்ச்சியை மிஸ் பண்ணாமல் நிறைய பேர் பார்ப்பார்கள்.
தந்தையை அடித்ததை பெருமையாக சொன்ன மகன்:
இப்படியான நிலையில் நீயா? நானா? நிகழ்ச்சி ஞாயிறுதோறும் பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இந்த வாரம் “சண்டை சச்சரவுகளில் ஈடுபடும் இளைஞர்கள் vs பொதுமக்கள்” என்ற டாபிக்கில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொகுப்பாளர் கோபிநாத், ‘சண்டை போட வரும் என எப்போது தெரிந்து கொண்டீர்கள்?’ என கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஜெபக்குமார் என்ற இளைஞர், “நான் முதன்முதலில் எங்க அப்பாவை தான் அடிச்சேன். அவர் என்னை திருப்பி அடிச்சாரு என சொன்னார். உடனே அதிர்ச்சியடைந்த கோபிநாத், எதுக்கு அப்பாவை அடிச்சீங்க? என கேட்டார். அதற்கு, ‘அவர் என்னை ஸ்கூலுக்கு போல சொன்னார். நமக்கு அது தோணாததனால் தான் நான் வேலைக்கு போனேன். நம்ம விருப்பத்துக்கு விட்டுறனும்ல. நான் 6, 7 ஆம் வகுப்பு படிச்சா கூட அடிச்சி அனுப்பிருக்கலாம். ஆனால் நான் 11 ஆம் வகுப்பு படிச்சிட்டு இருக்கேன். பெரிய பையன் ஆகிட்டோம். அவங்களே படிக்கலை. நம்மளை தொல்லைப் பண்ணக்கூடாது. நம்ம இஷ்டத்துக்கு நம்மை விட்டு விட வேண்டும்” என அந்த நபர் கூறினார்.
இதையெல்லாம் கேட்ட கோபிநாத், படிக்க சொல்றது நல்ல விஷயம் தானே. பிளஸ் 2 முடிச்சிட்டு காலேஜ் சேர்க்க தானே நினைச்சிருப்பாங்க. அவங்க படிக்காததால் தானே நீங்க படிக்கணும்ன்னு நினைக்கிறாங்க. அப்பாவுக்கும் உங்களுக்கும் 25 வயசு வித்தியாசம் இருக்கு. அவரை அடிச்சிருக்க கூடாதுல என அட்வைஸ் செய்தார்.
உடனே அந்த இளைஞன், ‘நம்மளை அடிக்கும்போது நம்ம கெத்து குறையுதுல. நம்ம பேர் இருக்கப்போய் தானே பசங்க கூட சுத்துறோம்’ என கெத்தாக சொல்ல, அந்த பெயரை யார் வைத்தது ஜெபக்குமாரு? என பதிலடி தரும் வகையில் நக்கலாக கோபிநாத் கேள்வி கேட்டார். இதற்கு அந்த இளைஞன் பதிலளிக்க முடியாமல் இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.