மேலும் அறிய

Pride Month : பால்புதுமையினரை கொண்டாடும் படங்கள்.. தினம் ஒரு படம் (Happy Together)

ஜூன் மாதம் முழுவதும் ப்ரைட் மாதமாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு பால்புதுமையினரை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படங்களைப் பார்க்கலாம்

தியாகராஜா குமாரராஜ இயக்கிய மாடர்ன் லவ் சீரிஸில் இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இயக்கிய நினைவோ ஒரு பறவை படத்தில் கதாநாயகன் கே மற்றும்  கதாநாயகி சாம் ஆகிய இருவருக்கு இடையில் ஒரு சின்ன உரையாடல் நடக்கும்

சாம் : ”நான் ஒரு ஆணாக பிறந்திருந்தால் உனக்காக நான் gay ஆக மாறியிருப்பேன்

கே: “ நானும் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உனக்காக நான் lesbian ஆக மாறியிருப்பேன்தான்

சாம்: இல்லை… பெரும்பாலானப் பெண்களும் மற்றப் பெண்களின் உடலை ரசிக்கிறார்கள். ஆனால் ஒரு ஆண் இன்னொரு ஆணின் உடலைக் கண்டு அசெளகரியமாகவே உணர்கிறார்கள். அதனால் நான் உன்மேல் வைத்திருக்கும் காதல் நீ என்மேல் வைத்திருப்பதை விட பெரிது என சொல்கிறேன்.

இயக்குனர் wong kar wai இயக்கியப் படம் happy together.

Happy together

ஃபாய் மற்றும் ஹோ ஆகிய இரு ஒருபாலீர்ப்புக் கொண்ட காதலர்கள் ஹாங்காங்கில் இருந்து தங்களது வாழ்க்கையை புதிதாகத் தொடங்கும் திட்டத்தில் அர்ஜெண்டினா வந்து சேருகிறார்கள் ஆனால் இருவருக்கும் இடையிலான உறவு முறிந்து பிரிந்துவிடுகிறார்கள். மறுபடியும் தங்களது வீட்டிற்கு செல்ல பணமில்லாமல் ஒரே நகரத்தில் வெவ்வேறு சூழலில் வாழ்ந்து வருகிறார்கள். ஒருவரை ஒருவர் வெறுக்கவும் முடியாமல் சகித்துகொள்ளவும் முடியாமல் இவர்களுக்கு இடையில் நடக்கும் ஊடாட்டம்தான் படத்தின் பெரும்பகுதி.

காதல் என்பது  யார் இரண்டு நபர்களுக்கு  நடுவில்  நிகழ்ந்தாலும் அதில் ஒரே வகையான உணர்வுகளை தான்  நாம் அனைவரும் எதிர்கொள்ளபோகிறோம்.  நேசிப்பது,  நேசிக்கப்படுவது, ஏமாற்றப்படுவது, மன்னிப்பது, மீண்டும் ஏமாற்றப்படுவது, மீண்டும் மன்னிப்பது என இது தொடர்ந்துகொண்டே இருக்கிறது இல்லையா….அதில் ஒரு சலிப்பும் ஏற்படுகிறது….இருந்தாலும் மீண்டும் அதே உறவிற்குள் தான் செல்கிறோம். ஹோ மற்றும் ஃபாய் ஆகிய இருவரின் காதலும் இத்தகையது தான். ஆனால் இதற்கெல்லாம் முடிவு என்ற ஒன்று இருக்க வேண்டும் இல்லையா. அது படத்தின் க்ளைமேக்ஸைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

தமிழ் சினிமாவில் ஒரு ஆண் இன்னொரு ஆணை கட்டிப்பிடித்து அழும் எத்தனை காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். அப்படி ஒரு காட்சி உங்கள் மனதில் தோன்றினால் அந்த காட்சியில் நடிகர்கள் நிச்சயம் மதுபோதையில் தான் இருப்பார்கள். மலையாளத்தில் கும்பலங்கி நைட்ஸ் மற்றும் வெயில் ஆகிய இரு படங்களில் இதனை நிகழ்த்தியிருக்கிறார்கள்.  

தொடக்கத்தில் தியாகராஜா குமாரராஜா படத்தில்  சாம் சொல்வதுபோல் ஆண்கள் ஆண்களின் பலவீனங்களை கண்டு அசெளகரியப்படுகிறார்கள். இரண்டு ஆண்களுக்கு இடையிலான காதலைப் பற்றிய ஒரு படத்தை எதிர்பாலீர்ப்புக் கொண்ட எத்தனை ஆண்களால் முகம் சுழிக்காமல் பார்க்க முடியும்

இயக்குநர் வாங் கார் வாய்  படங்களில் வரும்  ஆண்கள் பலமீனமானவர்களாக இருப்பதுதான், அவரது கதாபாத்திரங்களோடு நாம் ஒன்ற முடிவதற்கான காரணம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்Seeman meets Rajini : ரஜினி வீட்டுக்கே போன சீமான் 1 மணி நேரம் பேசியது என்ன?விஜய்க்கு வைக்கும் செக்!DMK MP Meeting : அதானி To வக்பு வாரியம் நெருங்கும் குளிர்கால கூட்டத்தொடர் SCENE-க்கு வந்த ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! அடுத்த 7 நாட்களுக்கு கனமழை இருக்கு.!மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெறும் மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
Amaran :''ஹலோ சாய் பல்லவியா?''...ரசிகர்கள் கொடுத்த டார்ச்சரால் விபரீதம்..எப்படி சமாளிக்கப் போகிறது அமரன் படக்குழு?
Amaran :''ஹலோ சாய் பல்லவியா?''...ரசிகர்கள் கொடுத்த டார்ச்சரால் விபரீதம்..எப்படி சமாளிக்கப் போகிறது அமரன் படக்குழு?
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
போலி டாக்டரிடம் சிகிச்சை... இளம்பெண் மரணம்... குழந்தை பிறந்த 20 நாளில் நடந்த சோகம் 
போலி டாக்டரிடம் சிகிச்சை... இளம்பெண் மரணம்... குழந்தை பிறந்த 20 நாளில் நடந்த சோகம் 
Embed widget