Samantha: 'நாகசைதன்யா மிகவும் மோசம்.. சமந்தாவின் கருவே கலைந்துவிட்டது' - ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய திரைவிமர்சகர்
தெலுங்கு திரையுலகின் நடிகர்கள் நாக சைதன்யா, ரவி தேஜா, நடிகை சமந்தா உள்ளிட்டவர்களைப் பற்றி திரைப்பட விமர்சகர் உமைர் சந்த் என்பவர் அளித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு திரையுலகின் நடிகர்கள் நாக சைதன்யா, ரவி தேஜா, நடிகை சமந்தா உள்ளிட்டவர்களைப் பற்றி திரைப்பட விமர்சகர் உமைர் சந்த் என்பவரின் ட்வீட் புயலை கிளப்பியுள்ளது.
பிரபல நடிகை சமந்தா:
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். அதன்பிறகு சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வரும் சமந்தா நடிப்பில் யசோதா படம் வெளியாகியிருந்தது. தொடர்ந்து ஏப்ரல் 14 ஆம் தேதி சாகுந்தலம் படம் வெளியாகவுள்ளது. அதுமட்டுமல்லாமல் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்திலும் சமந்தா நடித்து வருகிறார்.
மேலும் சரும பாதிப்பு ஒன்றால் அவதிப்பட்ட சமந்தா தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது ஓரளவு சரியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ள சமந்தா பல்வேறு வழிபாட்டு தலங்களுக்கும் சென்று வருகிறார். அதேபோல் நாகசைதன்யா நடிப்பில் தமிழில் வெங்கட்பிரபு இயக்கிய கஸ்டடி படம் உருவாகியுள்ளது. இப்படி இருவரும் தங்கள் கேரியரில் கவனம் செலுத்தி வரும் நிலையில் வெளிநாட்டின் சென்சார் போர்டு உறுப்பினர், திரைப்பட விமர்சகர் என்னை தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் உமர் சந்து பதிவிட்ட ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகசைதன்யா மோசமான கணவர்:
அவர் தனது ட்வீட்டில், “ நாகசைதன்யா தன்னை துன்புறுத்தியதாகவும், அவர் மோசமான கணவர் என சமந்தா கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும், சமந்தா நான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் துன்புறுத்தப்பட்டேன். நான் கர்ப்பமாக இருந்த நிலையில் கருக்கலைப்பு ஆனது. நான் விவாகரத்து செய்துவிட்டேன். கடவுளுக்கு நன்றி எனவும் சமந்தா தெரிவித்ததாக பதிவிட்டார்.
ரவிதேஜா மீதும் விமர்சனம்:
அதேசமயம் மற்றொரு ட்வீட்டில், நடிகர் ரவிதேஜாவுடன் பணிபுரிவதில் பல இளம் நடிகைகள் சங்கடமாக உணர்கிறார்கள் என்றும், பாடல் படப்பிடிப்பின் போது அவர் தொடும் விதம் மோசமாக உள்ளது. பல புதுமுக நடிகைகளுக்கு தொல்லை கொடுத்தார் எனவும் சரமாரியாக பதிவிட்டிருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் கடுப்பாகி உமர் சந்துவை கண்டபடி விமர்சிக்க தொடங்கினர். முன்னதாக வெளியாகும் ஒவ்வொரு படங்களையும் முன்கூட்டியே சென்சார் போர்டில் உறுப்பினராக இருக்கும் தான் பார்த்துவிட்டதாக கூறி, படம் குறித்து விமர்சனம் செய்தது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.