Merry Christmas Trailer: கத்ரினாவுடன் டைம் ட்ராவல் செய்த விஜய் சேதுபதி.. ‘மெரி கிறிஸ்துமஸ்’ ட்ரெய்லர் எப்படி இருக்கு?
Merry Christmas Tamil Trailer: விஜய் சேதுபதி கத்ரீனா கைஃப் நடித்துள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்; படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மெரி கிறிஸ்துமஸ்
பாலிவுட்டில் ஜவான், ஃபார்ஸி என அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி தற்போது நடித்துள்ள படம் மெரி கிறிஸ்துமஸ் (Merry Christmas). இப்படத்தில் அவருடன் பாலிவுட்டின் உச்ச நடிகை கத்ரீனா கைஃப் ஜோடி சேர்ந்துள்ளார். பத்லாப்பூர், அந்தாதுன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ் , இந்தி என இரு மொழிகளிலும் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கேத்ரினா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி பிரதான வேடங்களில் நடித்திருக்கும் 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கிறது.
ரமேஷ், துரானி, சஞ்சய் ரவ்ட்ராய், ஜெயா துரானி, மற்றும் கேவல் கார்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருக்கிறார். விநாயகர் பிரதிமா கண்ணன் மற்றும் டினு ஆனந்த் (நாயகன் புகழ்) ஆகியோர் இந்திப் பதிப்பில் நடித்து சிறப்பு சேர்த்திருக்கிறார்கள். இதேபோல் தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெபாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் சிறப்பாக நடித்து தங்கள் பங்களிப்பை செய்திருக்கிறார்கள். ராதிகா ஆப்தே மற்றும் அஸ்வின் கலாசேகர் ஆகியோர் இரண்டு பதிப்புகளிலும் தங்கள் முத்திரை பதிக்கும் வண்ணம் நடித்து இருக்கிறார்கள்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த திரைப்படத்தின் கதைக்களம், கொண்டாட்டம் மிகுந்த கிறிஸ்மஸை மையமாகக் கொண்டிருப்பதால் 'மெரி கிறிஸ்மஸ்' என்று படத்திற்கு பெயரிட்டிருப்பதுடன், அதை கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வெளியிடவும் திட்டமிட்டு இருந்தார்கள். கிறிஸ்துமஸ் சமயத்தில் ஏராளமான படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமிப்பதால், இந்த படத்தை இரண்டு வாரங்கள் தள்ளி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கிரார்கள்.
ப்ரீத்தம் மற்றும் வருண் க்ரூவர் இருவரும் இணைந்து முதல் முறையாக பாடியிருக்கும் பாடல் எங்களது 'மெரி கிறிஸ்மஸ்' படத்தில் இடம் பெறுகிறது. வெகு விரைவில் இந்த பாடல் வெளியிடப்படும். புத்தாண்டில் இன்னும் சில இனிப்பான செய்திகளுடன் படக்குழுவினர் சந்திக்க இருக்கிறார்கள்.
ரமேஷ், துரானி, சஞ்சய் ரவ்ட்ராய், ஜெயா துரானி, மற்றும் கேவல் கார்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் 'மெரி கிறிஸ்மஸ்' திரைப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருக்கிறார். டிப்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை முதல் முறையாக தயாரித்திருக்கிறது.அனைவருக்கும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை மெரி கிறிஸ்மஸ் படக்குழுவினர் தெரிவித்துக் கொள்கிறார்கள்.