ஆரம்பிச்சாச்சு....ஹை ஸ்பீட்டில் செல்லும் சிவகார்த்திகேயனின் டான் !
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து வெள்ளித்திரையில் சாதித்தவர்கள் ஏராளமானோர். கோலிவுட், டோலிவுட், மோலிவுட் பாலிவுட் என அனைத்து மொழிகளிலுமே தொகுப்பாளர்கள் ஆக இருந்து பின்பு வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக மாறுவதை நாம் பார்த்து வருகிறோம்.
அப்படி விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய சிவகார்த்திகேயன் தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். இவர் தற்போது நடிகர் மட்டுமின்றி படங்களைத் தயாரிப்பது, பாடல் எழுதுவது, பாட்டு பாடுவது உள்ளிட்ட ஏராளமான திறமைகளை வெளிக்காட்டி வருகிறார்.
இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள அயலான், டாக்டர் ஆகிய இரண்டு திரைப்படங்கள் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளன. இதில் டாக்டர் திரைப்படம் அடுத்த மாதம் ஆயுத பூஜை பண்டிகையையொட்டி வரும் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். ஓடிடியில் வெளியாகும் என கூறப்பட்ட இப்படம், திரையரங்குகளில் தான் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்ததை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடு வருகின்றனர்.
இதனை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் டான். இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடித்து இருப்பதால் தனது உடல் எடையை மிகவும் கணிசமாக குறைத்து அசத்தி இருக்கிறார்.
Aarambichachu... 💥
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) September 23, 2021
Dubbing of our #DON started with an auspicious pooja today 🎙️@Siva_Kartikeyan @KalaiArasu_ @LycaProductions @Dir_Cibi @anirudhofficial @priyankaamohan @iam_SJSuryah @sooriofficial @dop_bhaskaran @Inagseditor @Udaya_UAart @anustylist @tuneyjohn @DoneChannel1 pic.twitter.com/8RyPNGkUJe
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது. இதனை அடுத்து கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்த பட்டிருந்த படப்பிடிப்பு சமீபத்தில் பொள்ளாச்சி, சென்னை, ஆக்ரா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று முடிந்தது.
சமீபத்தில் டான் படத்தின் இயக்குனர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது. இதனை யூனிட் ஜான் வடிவு அமைத்து இருந்தார். இவர் ஏற்கனவே ஜகமே தந்திரம் புஷ்பா மாறன் ஆகிய படங்களின் போஸ்டரை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் டப்பிங் பேசுவது போன்ற புகைப்படமும் வெளியாகியுள்ளது. விரைவில் படத்தின் டீஸர் குறித்து தகவல் வெளியிட பட உள்ளது.
இன்றைய முக்கியச் செய்திகள் இதோ:
வேலூர் மாவட்டத்தில் வெற்றி பெறப்போவது யார்?
கோயில் நிலத்தில் கிஷ்கிந்தா தீம் பார்க்?
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தடியடி
அழகுக்கு அப்பாலும் ஜொலித்தவர் சில்க்!
மாலையில் சஸ்பெண்ட்... இரவில் ரத்து... ஆசிரியை மகாலட்சுமிக்கு நடந்தது என்ன?
மேல்மருவத்தூர் பங்காரூஅடிகளார் மனைவிக்கு இவ்வளவு சொத்தா?