மேலும் அறிய

ABP Nadu Exclusive: பெரியார் விருந்து... மாலையில் சஸ்பெண்ட்.. இரவில் ரத்து... ‛ஐவர் சூழ்ச்சியை விவரிக்கும் ஆசிரியை மகாலட்சுமி!

‛ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன்...’ ஜவ்வாது மலை உண்டு உறைவிட பள்ளி இடைநிலை ஆசிரியர் மகாலட்சுமி, ABP Nadu இணையதளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டி இதோ:

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் பகுதியில் உள்ள, அரசவெளி கிராமத்தில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட ஆரம்பப்பள்ளி இடைநிலை ஆசிரியராக மகாலட்சுமி என்பவர் பல வருடங்களாக பணியாற்றி வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களின் நலனுக்கா பல நன்மைகளும் மலைவாழ்மக்கள் பள்ளியில் பயில மாணவர்கள் வராத நிலையில் இவர் தனிமனிதராக ஐவ்வாதுமலையில் உள்ள மலைவாழ் மக்களிடம் பேசி அவர்களுடைய பிள்ளைகளை சேர்பதற்கு பல முயற்சிகளை எடுத்து பள்ளியில் மாணவர்களை சேர்த்தார்.

ABP Nadu Exclusive: பெரியார் விருந்து... மாலையில் சஸ்பெண்ட்.. இரவில் ரத்து... ‛ஐவர் சூழ்ச்சியை விவரிக்கும் ஆசிரியை மகாலட்சுமி!

இவருடைய சமூக சேவையை  பாராட்டி அரசு சார்பில் பல விருதுகளை பெற்றுள்ளார். இந்த நிலையில் தான் மகாலட்சுமி மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காக அந்த ஆணையில் குறிப்பிடப்பட்ட காரணங்கள் இவை தான்...

‛ஆரம்ப பள்ளி இடைநிலை ஆசிரியர் மகாலட்சுமி அரசு உத்தரவுகளை மதிக்காமல் கொரோனா பெருந்தொற்று பரவிவரும் அசாதாரண சூழ்நிலையில் தொடக்கப்பள்ளி குழந்தைகளை ஒருங்கிணைத்து பள்ளியை தொடர்ந்து நடத்தி குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாகவும், 

இம்மாவட்டத்தில் தரமற்ற அசைவ உணவு உட்கொண்ட குழந்தைகள் இறந்துபோன சம்பவம் நடந்தநிலையில் உயர் அலுவலர்கள் மற்றும் பள்ளியின் தலைமைஆசிரியர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்காமல் வெளிநபர்களிடம் நிதி திரட்டி தன்னிச்சையாக அசைவ உணவு தயார் செய்து பள்ளி குழந்தைகளுக்கு வழங்கியது.

ABP Nadu Exclusive: பெரியார் விருந்து... மாலையில் சஸ்பெண்ட்.. இரவில் ரத்து... ‛ஐவர் சூழ்ச்சியை விவரிக்கும் ஆசிரியை மகாலட்சுமி!

அரசு பள்ளியான இப்பள்ளியில் உயர் அலுவலர்களின் அனுமதியின்றி வெளி நபர்களிடம் நிதி வசூல் செய்து பள்ளியின் உட்புறம் அதிக எடைகொண்ட உலோக மேற்கூரை அமைத்தது மற்றும் பள்ளியை பார்வையிடும் உயர் அலுவலர்களிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டது, பழங்குடியின மக்களின் அறியாமையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு எவ்விதமான நலத்திட்டங்களையும் செய்யவில்லை என்றும், தானே தனது முயற்சியால் இப்பள்ளியை நடத்தி வருவது போல பொது வெளியிலும் சமூக ஊடகங்களிலும் தவறான தகவலை பரப்பி அதன் மூலம் அரசின் மீது பொதுமக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட காரணமாக அமைந்தது,’ போன்ற செயல்களில் ஈடுபட்டது மற்றும் பார்வை: 1,2,3 மற்றும் 4ல் காணும் ஆதார ஆவணங்களின் அடிப்படையில் தமிழ்நாடு குடிமுறை அரசுப் பணிகள்(ஒழுங்கு மற்றும் மேல் முறையீடுகளும்) விதி 17(e)ன் கீழ் தனியர் .சுமகாலட்சுமி என்பவரை தற்காலிக பணி நீக்கம் செய்து இதன் மூலம் ஆணையிடப்படுகிறது. என இவ்வாறு அதில் குறிப்பிட்டு இருந்தது 

ABP Nadu Exclusive: பெரியார் விருந்து... மாலையில் சஸ்பெண்ட்.. இரவில் ரத்து... ‛ஐவர் சூழ்ச்சியை விவரிக்கும் ஆசிரியை மகாலட்சுமி!

பலரின் பாராட்டைப் பெற்ற ஒரு ஆசிரியர், திடீரென சஸ்பெண்ட் ஆக காரணம் என்ன... அது குறித்து ஆசிரியர் மகாலட்சுமியிடம் ABP Nadu சார்பில் பேசினோம்... இதோ அவர் அளித்த பிரத்யேக பேட்டி: 

‛‛நான் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியில் உள்ள உண்டு உறைவிட பள்ளி இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். அப்போது இந்த பள்ளியில் மாணவர்கள் யாரும் கல்வி பயில்வதற்கு வராமல் இப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் அனைவரும் கூலி வேலைக்கு அழைத்து செல்வார்கள். இந்நிலையில் நான் ஒவ்வொரு மலை கிராமங்களுக்கு சென்று படிப்பை பற்றிய கூறி ஒவ்வொரு மாணவர்களாக பள்ளியில் சேர்ந்து வந்தேன். ஆனால் பள்ளியின் கட்டமைப்பு சரியான முறையில் இல்லை.

நான் என்னுடைய நண்பர்களிடம் கூறி நிதி உதவி மற்றும் என்னுடைய சம்பளம் ஆகியவற்றை வைது சிறிது சிறிதாக பள்ளியின் தரத்தை உயர்த்தி வந்தேன். தற்போது பல சேவைகளும் செய்து வந்தேன் இதனால் எனக்கு பல விருதுகளையும் வழங்கியுள்ளனர். எங்களுடைய பள்ளியில் பயிலும் மாணவர்கள் மதியம் வழங்கப்படும் சத்துணவு சரியான முறையில் இல்லை இதனால் எங்களால் மதியம் சாப்பிட முடியவில்லை என தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர்.

ABP Nadu Exclusive: பெரியார் விருந்து... மாலையில் சஸ்பெண்ட்.. இரவில் ரத்து... ‛ஐவர் சூழ்ச்சியை விவரிக்கும் ஆசிரியை மகாலட்சுமி!

ஆனால் தலைமை ஆசிரியர் எந்த விதமான நடவடிக்கையும் பதிலையும் மாணவர்களிடம் கூறவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு  பள்ளியில் வழங்கப்படும் தரமில்லா உணவு பற்றி தெரிவித்துள்ளனர்.

வருவாய் துறையினர் மூலம் 7 நபர்கள் கொண்ட குழுவினர்  மாணவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது விசாரணையில் மாணவர்கள் பள்ளியில் வழங்கப்படும் உணவு மற்றும் தங்கும் விடுதி காப்பாளர் இல்லை மற்றும் விடுதியின் இரவு நேர வாச்மேன் இருப்பதில்லை ,விளையாட்டு மைதானம் தரமான கட்டிடம் இல்லை என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை மாணவர்கள் எழுதி கொடுத்தாக எனக்கு தகவல் வந்தது.  அப்போது நான் ஐ. சி. டி. சி  5 நாட்கள் பயிற்சியில் இருந்தேன். 

ABP Nadu Exclusive: பெரியார் விருந்து... மாலையில் சஸ்பெண்ட்.. இரவில் ரத்து... ‛ஐவர் சூழ்ச்சியை விவரிக்கும் ஆசிரியை மகாலட்சுமி!

சமீபத்தில் வந்த பெரியார் பிறந்தநாள் அன்று நான் என்னுடைய மாணவர்களை பார்க்க சென்றேன். அப்போது என்னுடைய மாணவர்கள் எங்களுக்கு பிரியாணி சாப்பிடணும் போல் உள்ளது, என தெரிவித்தனர். அன்று இரவு நான் கேக் மற்றும் பிரியாணி தயார் செய்து எடுத்து சென்றேன். அப்போது கேக் கட்செய்யும் போது அங்கு உள்ள சிறுவர்களை வைத்தும் கேக் வெட்டி கொண்டாடினோம். அதற்கு ஜவ்வாது மலையில் உள்ள தாசில்தார் ரமேஷ் என்பவர், நான் ஒன்றாம் வகுப்பு முதல் 5 வகுப்பு மாணவர்களை வைத்து பாடம் நடத்துவதாக புகார் மனுவை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தார். 

இந்த புகார் மனுவை பிஓ அலுவலகத்திற்கு அனுப்பனார்கள். இதற்கு முன் மாவட்ட ஆட்சியரிடம் சென்ற புகாரை மனதில் வைத்து, அதில் என்னுடைய பின்னணி இருக்கும் என கருதி, தாசில்தார் ரமேஷ் மற்றும் என் மீது வஞ்சம் கொண்ட ரோசாலி என்பவர் உள்ளிட்டோர் ஐந்து பேர் சேர்ந்து எனக்கு எதிரான அறிக்கை தயார் செய்து, என்னை பணியிடம் நீக்கம் செய்துள்ளனர். ஜவ்வாது மலையில் உள்ள இந்த உண்டு உறைவிடப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்ககூடிய சலுகைகள் அனைத்திலும் முறைகேடு நடக்கிறது. அதை எதிர்ப்பதால் நான் பழிவாங்கப்படுகிறேன்,’’ என்றார். 

ABP Nadu Exclusive: பெரியார் விருந்து... மாலையில் சஸ்பெண்ட்.. இரவில் ரத்து... ‛ஐவர் சூழ்ச்சியை விவரிக்கும் ஆசிரியை மகாலட்சுமி!

இதற்கிடையில் ஆசிரியர் மகாலட்சுமி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பின்னணி அறிந்த மாவட்ட ஆட்சி தலைவர், சம்மந்தப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய சம்மந்தப்பட்ட துறைக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் ஆசிரியை மகாலட்சுமியின் சஸ்பெண்ட் உத்தரவு இரவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மீது பழி சுமர்த்திய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget