மேலும் அறிய

Renault Duster: ஒரு வழியா தேதி சொல்லிட்டாங்க..! மார்ச் 17 முதல் டஸ்டர் - டெலிவெரி எப்போது? ரெனால்ட் அறிவிப்பு

Renault Duster: டஸ்டர் கார் மாடல் வரும் மார்ச் 17ம் தேதி முதல், ஷோரூம்களில் டிஸ்பிளே மற்றும் டெஸ்ட் ட்ரைவிற்காக கிடைக்கும் என ரெனால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

Renault Duster: டஸ்டர் கார் மாடல் விநியோகம் ஏப்ரல் மாதம் தொடங்கும் என ரெனால்ட் நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெனால்ட் டஸ்டர் எஸ்யுவி - மார்ச்.17

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மூன்றாவது தலைமுறை டஸ்டர் கார் மாடல், வரும் மார்ச் 17ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக சந்தைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு உள்நாட்டு சந்தையில் விற்பனை பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட மிட்-சைஸ் எஸ்யுவியின் புதிய எடிஷனானது, கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி முதல்முறையாக வெளியிடப்பட்டது. இந்த டஸ்டர் கார் மாடலை தொடர்ந்து, சர்வதேச சந்தையில் அதிகம் விற்பனையாகும் தனது கார் மாடல்களை இந்தியாவிற்குள் கொண்டு வர ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, 17ம் தேதி முதல் ஷோரூம்களில் காட்சிப்படுத்தப்படுவதோடு, விருப்பமுள்ள பயனர்கள் டெஸ்ட் ட்ரைவிங்கையும் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெனால்ட் டஸ்டர் விநியோகம் எப்போது? விலை?

காருக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், விருப்பமுள்ள நபர்கள் ரூ.21 ஆயிரத்தை முன்தொகையாக செலுத்தி, காரை பதிவு செய்துகொள்ளலாம். நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளம் வாயிலாகவும் மற்றும் நேரடியால டீலர்ஷிப் அலுவலகங்களை அணுகியும், பயனர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம். அவர்களுக்கான விநியோகம் ஏப்ரல் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 முதல் 20 லட்சம் ரூபாய் வரையில் விலை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படும் நிலையில், உள்ளூர் சந்தையில் ஹுண்டாய் க்ரேட்டா,  டாடா சியாரா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷக் மற்றும் ஹோண்டா எலிவேட் ஆகிய மாடல்களுடன் போட்டியிடுகிறது.


Renault Duster: ஒரு வழியா தேதி சொல்லிட்டாங்க..! மார்ச் 17 முதல் டஸ்டர் - டெலிவெரி எப்போது? ரெனால்ட் அறிவிப்பு

ரெனால்ட் டஸ்டர் - ஹைப்ரிட் இன்ஜின் எப்போது?

இந்திய சந்தையில் ரெனால்ட் டஸ்டர் கார் மாடலானது, இரண்டு டர்போ - பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் ஒரு வலுவான ஹைப்ரிட் பவர்ட்ரெயின் ஆப்ஷனுடன் சந்தைப்படுத்தப்பட உள்ளது. அதில் டர்போ ஆப்ஷன்களானது கைகரில் உள்ள 1.0 லிட்டர் மற்றும் செக்மெண்டின் சிறந்த தேர்வாக உள்ள 1.3 லிட்டர் அடங்கும்.  இரண்டிலுமே 6 ஸ்பீட் மேனுவல்  ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்பட உள்ள நிலையில், கூடுதலாக இரண்டிலும் 6 ஸ்பீட் DCT ஆப்ஷனும் இடம்பெற உள்ளதாம். 109hp அளவிலான ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய வலுவான, 1.8 லிட்டர் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜினை கொண்ட டஸ்டர் எடிஷன், நடப்பாண்டின் தீபாவளி வாக்கில் சந்தைப்படுத்தப்பட உள்ளதாம். அதில் 49hp மின்சார மோட்டார், 20hp ஹப்ரிட் ஸ்டஅர்டர் ஜெனரேட்டர் மற்றும் 1.4KWh பேட்டரி கலவை இடம்பெற்று, ஒட்டுமொத்தமாக, 160hp ஆற்றலை உற்பத்தி செய்ய உள்ளது.


Renault Duster: ஒரு வழியா தேதி சொல்லிட்டாங்க..! மார்ச் 17 முதல் டஸ்டர் - டெலிவெரி எப்போது? ரெனால்ட் அறிவிப்பு

ரெனால்ட் டஸ்டர் - புதுவித டிசைன்

இந்திய சந்தைக்கான டஸ்டரானது சர்வதேச மாடலின் சில்-ஹவுட்டை அப்பைடியே தக்கவைத்துக் கொண்டாலும், உள்ளூர் சந்தைக்கான சில தனித்துவமான டச்களையும் கொண்டுள்ளது. முன்பகுதியில் கண் புருவம் மாதிரியான எல்இடி பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகள் இடம்பெற அதுவே டர்ன் இண்டிகேட்டர்களாகவும் செயல்படுகிறது. ரெனால்ட் லோகோ இல்லாமால் டஸ்டர் என்ற பெயர் பொறிக்கப்பட்ட க்ரில், சுற்றிலும் சில்வர் பம்பர் மற்றும் பிக்சல் வடிவிலான ஃபாக் லேம்புகள் வழங்கப்பட்டுள்ளன. கருப்பு நிற பாடி க்ளாடிங், C-பில்லர் ரியர் டோர் ஹேண்டில்கள், 50 கிலோ வரையிலான எடையை தாங்கக் கூடிய ரூஃப் ரெயில், 18 இன்ச் வரையிலான அலாய் வீல்கள், 212 மில்லி மீட்டர் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. பின்பகுதியில் கனெக்டட் எல்இடி லைட்பார், ரூஃப் மவுண்டட் ஸ்பாய்லர், சில்வர் அக்செண்ட்களுடன் கூடிய ப்ளாக் பம்பர் வழங்கப்பட்டுள்ளன.


Renault Duster: ஒரு வழியா தேதி சொல்லிட்டாங்க..! மார்ச் 17 முதல் டஸ்டர் - டெலிவெரி எப்போது? ரெனால்ட் அறிவிப்பு

ரெனால்ட் டஸ்டர் - கொட்டிக் கிடக்கும் வசதிகள்

சர்வதேச சந்தைக்கான டஸ்டர் உடன் ஒப்பிடுகையில், இந்திய சந்தைக்கான டஸ்டரானது முற்றிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டேஷ்போர்டை கொண்டுள்ளது. இரட்டை  ஸ்க்ரீன் செட்-அப், சில்வர் ஆக்செண்ட்ஸ் மற்றும் நேர் எதிரான பச்சை வண்ண ஸ்டிட்சிங் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம், பிரதானமான செயல்பாடுகளுக்கான பிஷிகல் பட்டன்கள் அப்படியே தொடர்கிறது. கூடுதலாக கப் ஹோல்டர்களுடன் கூடிய ஸ்லைடிங் முன் மற்றும் பின்புற ஆர்ம்ரெஸ்ட்களை கொண்டுள்ளது.


Renault Duster: ஒரு வழியா தேதி சொல்லிட்டாங்க..! மார்ச் 17 முதல் டஸ்டர் - டெலிவெரி எப்போது? ரெனால்ட் அறிவிப்பு

ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், பவர்ட் டெயில்கேட், 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன்புற இருக்கைகள் உள்ளன. பாதுகாப்பிற்கான 6 ஏர் பேக்குகள் நிலையாக வழங்கப்படுகின்றன. இதுபோக 360 டிகிரி கேமரா, முன் மற்றும் பின்புற பார்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பார்கிங் ப்ரேக், 4 சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள் மற்றும் லெவல் 2 ADAS ஆகிய அம்சங்களும் புதிய ரெனால்ட் டஸ்டரில் வழங்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions

ரெனால்ட் டஸ்டர் புதிய மாடல் எப்போது முதல் விற்பனைக்கு வருகிறது?

ரெனால்ட் டஸ்டர் புதிய மாடல் மார்ச் 17 முதல் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வருகிறது. முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது.

ரெனால்ட் டஸ்டர் காரின் விநியோகம் எப்போது தொடங்கும்?

முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ரெனால்ட் டஸ்டர் கார் விநியோகம் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெனால்ட் டஸ்டர் காரில் என்னென்ன இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன?

ரெனால்ட் டஸ்டர் காரில் 1.0 லிட்டர் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களும், ஒரு 1.8 லிட்டர் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்பட உள்ளன.

ரெனால்ட் டஸ்டர் ஹைப்ரிட் மாடல் எப்போது எதிர்பார்க்கலாம்?

160hp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.8 லிட்டர் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் கொண்ட ரெனால்ட் டஸ்டர் மாடல் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்குள் சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ரெனால்ட் டஸ்டரில் என்னென்ன பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன?

புதிய ரெனால்ட் டஸ்டரில் 6 ஏர் பேக்குகள், 360 டிகிரி கேமரா, பார்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் லெவல் 2 ADAS போன்ற பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
Himalayan 440: ஆஃப் ரோட்டுக்கு இனி நான்தான்.. Royal Enfield Himalayan 440 அறிமுக தேதி அறிவிப்பு - எப்போது?
Himalayan 440: ஆஃப் ரோட்டுக்கு இனி நான்தான்.. Royal Enfield Himalayan 440 அறிமுக தேதி அறிவிப்பு - எப்போது?
ஒரே சார்ஜில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. Mahindra BE 07 வரப்போது மின்சார கார்! எப்போது?
ஒரே சார்ஜில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. Mahindra BE 07 வரப்போது மின்சார கார்! எப்போது?
ஒரே சார்ஜில் 300 கி.மீட்டருக்கு மேல் மைலேஜ்! இந்த 3 இ ஸ்கூட்டர்கள் மட்டும்தான் இதுல கெத்து - என்னென்ன?
ஒரே சார்ஜில் 300 கி.மீட்டருக்கு மேல் மைலேஜ்! இந்த 3 இ ஸ்கூட்டர்கள் மட்டும்தான் இதுல கெத்து - என்னென்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Embed widget