மேலும் அறிய
TN Roundup: தேர்தல் ஆணையம் ஆய்வு, வேட்புமனு தாக்கல் தொடக்கம், விஜய்க்கு ஆதரவு - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : ABP
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேர்தல் ஏற்பாடு குறித்து தேர்தல் ஆணையர் குழு இன்று சென்னையில் ஆய்வு
- தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம். மார்ச் 6-ம் தேதி மனுக்கள் மீது பரிசீலனை
- உடல்நலக்குறைவால் காலமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு இன்று பிற்பகல் அரசு சார்பில் மரியாதை.. இறுதி அஞ்சலிக்குப் பின் சென்னை மருத்துவ கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக உடல் தானமாக வழங்கப்படுகிறது
- தோழர் நல்லகண்ணுவுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த், அமைச்சர் அம்பில் மகேஷ், வைகோ
- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 1,19,360 ரூபாய்க்கு விற்பனை
- கரூர் தவெக பொதுக்கூட்டத்தில் திடீரென சரிந்து விழுந்த கட்சிக் கொடி கம்பம். மேடையில் நின்றுகொண்டிருந்த பேச்சாளர் ஜெகதீஷ் பாண்டியன் மீது விழுந்து காயம்
- இது தேவையா? எதுக்கு இந்த சீன்?.. தளபதி அப்படி என்ன தப்பா சொல்லிட்டாரு? - விஜய்யை சீண்டிய ஜூலிக்கு சனம் ஷெட்டி பதிலடி
- கோயம்புத்தூரில் இறந்த பின்பும் 7 பேருக்கு வாழ்வளித்த 8 வயது சிறுமி வெண்பா - கண்ணீரோடு விடைகொடுத்த பெற்றோர்
- சென்னை மின்சார ரயில் சேவை குறைப்பை அடுத்து பேருந்து சேவைக்கு ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு - தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே ரயில் பயண பாஸ் பெற்றவர்களுக்கு இலவச பேருந்து சேவை என அறிவிப்பு
- எடப்பாடியார் மீது கொலை முயற்சிப்பழி சுமத்துவது கடும் கண்டனத்திற்குரியது - கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேச்சு
- தவெகவிற்கு சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய தயாராக இருக்கிறார்கள் - சூலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
- சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டியில், இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதல்
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement
























