TN Local Body Election: வேலூர் யாருக்கு வெல்லூர்? துரைமுருகன் திணறியதும்... வீரமணி சிக்கியதும்... எதிரொலிக்குமா?
திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்றார். ஏற்கனவே ஒரு தொகுதியை அதிமுக கைவசம் வைத்திருக்கிறது. சில தொகுதிகளில் நெருங்கியும் வந்துள்ளது.
சட்டமன்ற தேர்தல் நிறைவு பெற்று திமுக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற கையோடு தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இது கட்சிகளின் பலம், பலவீனம் அறியும் தேர்தல் அல்ல. அதே நேரத்தில் மக்கள் யார் பக்கம் என்பதை எடை போடும் தேர்தல். ‛உள்ளாட்சியில் நல்லாட்சி’ என்கிற தாரகமந்திரத்தின் அடிப்படையில் இந்த தேர்தலை அரசியில் கட்சிகள் அவ்வளவு எளிதில் அனுகப்போவதில்லை. சில மாதங்களுக்கு முன் பொதுத்தேர்தலை சந்தித்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தான் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. சில மாதங்களுக்கு முன் அங்கிருந்த மக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது? அங்கு எந்த கட்சி கோலோச்சியது? அங்கு அதிக ஓட்டு வாங்கிய கட்சி எது? என்பது குறித்து ஏபிபி நாடு ‛உள்ளாட்சி... உள்ளது உள்ளபடி‛ பகுதியில் பார்க்கலாம். அந்த வகையில் இன்று நாம் பார்ப்பது என்றும் பரபரப்பான வேலூர் மாவட்டம் பற்றி!
வேலூர் மாவட்டம்
வேலூர் மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அந்தந்த ஒன்றியங்கள் வாரியான வாக்காளர்கள் குறித்த விபரம் இதோ:
ஊராட்சி ஒன்றியங்கள் |
வேலூர் |
அணைக்கட்டு |
குடியாத்தம் |
கணியம்பாடி |
காட்பாடி |
கே.வி.குப்பம் |
பேர்ணாம்பட்டு |
தொகுதி | ஆண் வாக்காளர் | பெண் வாக்காளர் | இதர வாக்காளர் |
வேலூர் | 1,21,101 | 1,30,243 | 26 |
அணைக்கட்டு | 1, 22,995 | 1,30,344 | 37 |
குடியாத்தம் | 1,39,342 | 1,48,302 | 40 |
காட்பாடி | 1, 19,583 | 1,27,813 | 32 |
கே.வி.குப்பம் | 1, 09,836 | 1,14,389 | 5 |
மாவட்ட மொத்த வாக்காளர்கள் விபரம்:
மாவட்டம் | மொத்தம் | ஆண்கள் | பெண்கள் | இதர |
வேலூர் | 7,16,984 | 3,48,898 | 3,68,006 | 80 |
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வகையில் வேலூர் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதோ அதன் விபரம்:
முதல் கட்ட தேர்தல் |
குடியாத்தம் கே.வி.குப்பம் காட்பாடி பேர்ணாம்பட்டு |
இரண்டாம் கட்ட தேர்தல் |
அணைக்கட்டு கணியம்பாடி வேலூர் |
யாருக்கு பலம்....? ‛உள்ளது உள்ள படி’!
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் கட்சிவாரியாக பெற்ற வாக்குகளின் அடிப்படையிலும், கட்சிகள் பெற்ற வெற்றியின் அடிப்படையிலும் அந்த மாவட்டத்தில் கட்சிகளின் பலத்தை காணலாம்.
1.வேலூர்
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
கார்த்திகேயன் | திமுக | 84,299 |
எஸ்.ஆர்.கே.அப்பு | அதிமுக | 75,118 |
விக்ரம் சக்கரவர்த்தி | மக்கள் நீதி மய்யம் | 7,243 |
பூங்குன்றன் | நாம் தமிழர் | 8,530 |
தர்மலிங்கம் | அமமுக |
865 |
மாவட்டத்தின் தலைநகரான வேலூரில் திமுக வேட்பாளர் 9,181 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இது கிட்டத்தட்ட நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளுடன் நெருங்கிப் போகும் வித்தியாசம். மக்கள் நீதி மய்யமும் இங்கு கணிசமான வாக்குகளை பெற்றிருக்கிறது. இங்கு அமமுக மிக பலவீனமான வாக்குகளை பெற்றிருக்கிறது. அதுவும் தேமுதிக மற்றும் எஸ்டிபிஐ கூட்டணியில். இங்கு பதிவான அதிகபட்ச வாக்குகள் பட்டியலில் நோட்டா 4வது இடத்தில் உள்ளது. 1,441 ஓட்டுகள் நோட்டாவுக்கு பதிவானது. அதாவது மொத்த வாக்கு எண்ணிக்கையில் 0.80% வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளது. போதுமான வாக்கு வித்தியாசம் இருப்பதால், இந்த தொகுதி திமுகவிற்கு சாதகமாகவே உள்ளது.
கூட்டணி | வாக்கு சதவீதம் |
திமுக | 46.86% |
அதிமுக | 41.76% |
மக்கள் நீதி மய்யம் | 4.03% |
அமமுக | 0.48% |
நாம் தமிழர் | 4.74% |
2.அணைக்கட்டு
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
நந்தகுமார் | திமுக | 95,159 |
வேலழகன் | அதிமுக | 88,799 |
தமிழரசன் | ஐஜேகே(மநீம) | 328 |
சுமித்ரா | நாம் தமிழர் | 8,125 |
சதீஷ்குமார் | அமமுக |
1,140 |
அணைக்கட்டு தொகுதியை பொருத்தவரை கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக-அதிமுக கூட்டணி இடையே கடுமையான போட்டி நிலவியது. திமுகவின் வெற்றி 6,360 ஓட்டுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளை விட மிகக்குறைவு. அங்கு மூன்று கட்சிகள் மட்டுமே கணிசமான வாக்குகளை பெற்றுள்ளன. திமுக, அதிமுக, நாம் தமிழர் மட்டுமே. மநீம சார்பில் கூட்டணியில் போட்டியிட்ட ஐஜேகே, மிக மிக சொற்ப ஓட்டுகளே பெற்றது. தொகுதியில் அதிகம் வாக்குகள் பெற்ற கட்சிகள் வரிசையில் 1,791 வாக்குகள் பெற்று நோட்டா 4வது இடத்தில் உள்ளது. அமமுக, மநீம கூட்டணிகள் நோட்டோவிற்கு பின் தள்ளப்பட்டன. திமுகவிற்கு பலமாக இருந்தது இந்த தொகுதி.
கூட்டணி | வாக்கு சதவீதம் |
திமுக | 48.11% |
அதிமுக | 44.89% |
மக்கள் நீதி மய்யம் | 0.17% |
அமமுக | 0.58% |
நாம் தமிழர் | 4.11% |
3.குடியாத்தம்
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
அமலு | திமுக | 100,412 |
பரிதா | அதிமுக | 93,511 |
பாபாஜி சி.ராஜன் | ஐஜேகே(மநீம) | 482 |
கலைபேத்ரி | நாம் தமிழர் | 11,834 |
ஜெயந்தி பத்மநாபன் | அமமுக |
1,810 |
குடியாத்தம் தொகுதியிலும் திமுக-அதிமுக இடையே கடைசி வரை கடும் போட்டி நிலவிய தொகுதி. இறுதியில் 6,901 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது. இது நாம் தமிழர் வாங்கிய வாக்குகளில் சரிபாதிக்கு குறைந்த வாக்குகள் ஆகும். இங்கும் மநீம கூட்டணியில் ஐஜேகே கடும் சரிவை சந்தித்தது. அமுமுக-தேமுதிக-எஸ்டிபிஐ கூட்டணி ஆளுக்கு 500 என்கிற அடிப்படையில் வாக்குகளை பெற்றன. சதவீத அடிப்படையில் பார்க்கும் போது திமுகவை எட்டும் தூரத்தில் அதிமுக உள்ளது. இருந்தாலும் வெற்றி பெற்றிருக்கிறது திமுக. எனவே அவர்களுக்கான சாதகம் இருக்கிறது.
கூட்டணி | வாக்கு சதவீதம் |
திமுக | 47.45% |
அதிமுக | 44.19% |
மக்கள் நீதி மய்யம் | 0.23% |
அமமுக | 0.86% |
நாம் தமிழர் | 5.59% |
4.காட்பாடி
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
துரைமுருகன் | திமுக | 85,140 |
ராமு | அதிமுக | 84,394 |
சுதர்சன் | ஐஜேகே(மநீம) | 1,003 |
திருக்குமரன் | நாம் தமிழர் | 10,449 |
ராஜா | அமமுக |
1,066 |
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் தொகுதி. அவரது சொந்த தொகுதி. ஆனால் கடைசி கட்ட வாக்கு எண்ணிக்கை வரை காத்திருந்து பெற்ற வெற்றி. வெறும் 746 வாக்குகளில் துரை முருகன் பெற்ற வெற்றி, திமுகவிற்கு பெரிய எச்சரிக்கை தான். இந்த வெற்றி வித்தியாசம் ஐஜேகே பெற்ற வாக்குகளை விட குறைவு, அமமுக வெற்ற வாக்குகளை விட குறைவு, நாம் தமிழர் அதை விட 100 சதவீதம் அதிகமான வாக்குகளை அங்கு பதிவு செய்திருக்கிறது. திமுக பொதுச் செயலாளருக்கே ‛டப்’ கொடுத்த தொகுதி... இந்த முறை உள்ளாட்சியில் பார்க்கலாம்...
கூட்டணி | வாக்கு சதவீதம் |
திமுக | 45.71% |
அதிமுக | 45.31% |
மக்கள் நீதி மய்யம் | 0.54% |
அமமுக | 0.57% |
நாம் தமிழர் | 5.61% |
5.கே.வி.குப்பம்
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
ஜெகன்மூர்த்தி | புரட்சி பாரதம்(அதிமுக) | 84,579 |
சீதாராமன் | திமுக | 73,997 |
வெங்கடசாமி | ஐஜேகே(மநீம) | 519 |
திவ்யராணி | நாம் தமிழர் | 10,027 |
தனசீலன் | தேமுதிக |
1,432 |
வேலூர் மாவட்டத்தில் கே.வி.குப்பம் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக்கு சாதகமான தொகுதி என்பதற்கு கே.வி.குப்பம் ஒரு உதாரணம். இங்கு அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட ஜெகன்மூர்த்தி திமுக வேட்பாளரை 10,582 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இது நாம் தமிழர் வாங்கிய ஓட்டுகளை விட அதிகம். வாக்கு சதவீதத்திலும் கணிசமான எண்ணிக்கையை அதிமுக கூட்டணி பெற்றுள்ளது. மநீம-ஐஜேகே கூட்டணி மிக குறைந்த வாக்குகளே இங்கு பெற்றன. அமமுக கூட்டணியில் தேமுதிகவும் சொல்லிக் கொள்ளும் வாக்குகளை பெறவில்லை. கடந்த முறையோடு ஒப்பிடும் போது இந்த தொகுதியில் அதிமுக பலமாக உள்ளது.
கூட்டணி | வாக்கு சதவீதம் |
திமுக | 42.50% |
அதிமுக | 48.57% |
மக்கள் நீதி மய்யம் | 0.30% |
அமமுக | 0.82% |
நாம் தமிழர் | 5.76% |
வேலூர் மாவட்டத்தில் கட்சிகளின் பலம்... பலவீனம் என்ன...?
கட்சி | பலம் | பலவீனம் |
திமுக |
கே.சி.வீரமணி ரெய்டு கூட்டணி தொடர்கிறது ஏற்கனவே பெற்ற வெற்றி ஆளுங்கட்சி என்கிற சாதகம் குறுகிய காலத்தில் ஆட்சிக்கு கிடைத்த நற்பெயர் பண பலம் |
அதிமுகவிற்கு கிடைத்த வாக்குகள் துரைமுருகனின் பெயரளவு வெற்றி அதிமுக வாக்கு சதவீதம் கூட்டணி பங்கீடு விஜய் மக்கள் இயக்கம் |
அதிமுக |
கடந்த கால வாக்கு விகிதம் கைவசம் ஒரு வெற்றி பண பலம் |
கே.சி.வீரமணி ரெய்டு நீக்கப்பட்ட நிர்வாகிகள் பாமக கூட்டணி வெளியேற்றம் நாம் தமிழர் வாக்குகள் எதிர்கட்சியாக தேர்தல் சந்திப்பு விஜய் மக்கம் இயக்கம் |
நாம் தமிழர் |
சட்டமன்றத்தில் கிடைத்த வாக்குகள் சீரான வாக்கு விகிதம் கூட்டணி இல்லாதது |
உள்ளூர் செல்வாக்கு இல்லாத வேட்பாளர்கள் பண பலம் மாவட்டத்தில் முன்னெடுக்கும் தலைமை |
மக்கள் நீதி மய்யம் |
கமல் என்கிற அடையாளம் |
கூட்டணிக்கு தாரைவார்த்தது மிகக்குறைவான வாக்கு விகிதம் கட்சியில் ஏற்பட்ட பிளவு மாவட்டத்தில் முன்னேடுக்கும் தலைமை பண பலம் |