மேலும் அறிய

Edappadi Palaniswamy: நாங்க ஜீரோவா? - தேர்தல் முடிவுல தெரியும்.. திமுகவுக்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணம் செல்லும் நிலையில் நேற்று மதுரவாயல் தொகுதியில் மக்களை சந்தித்து உரையாற்றினார். அப்போது திமுகவுக்கு சவால் விடுக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை பூஜ்ஜிய கூட்டணி என விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். 

இபிஎஸ் சூறாவளி சுற்றுப்பயணம்

2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்னும் 2 மாத காலம் மட்டுமே உள்ளது. மே மாதத்தில் தேர்தல் நடைபெறுவதாக சொல்லப்படும் நிலையில் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்திருக்கிறது. 

இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் செல்லும் நிலையில் நேற்று மதுரவாயல் தொகுதியில் மக்களை சந்தித்து உரையாற்றினார். 

திமுகவுக்கு தேர்தல் தோல்வி பயம்

அப்போது, “தேர்தல் தோல்வி பயம் காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்கூட்டியே ரூ.5,000 நிதியுதவியை அறிவித்துள்ளார். இந்த திட்டம் சூப்பர் ஹிட் கிடையாது. நான் அதிமுக ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு கருணைத் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என அளிக்கப்பட்ட வாக்குறுதியே சூப்பர் ஹிட் ஆகும் எனவும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய இபிஎஸ், திமுக ஆட்சியில் பல திட்டங்கள் காகிதத்தில் மட்டுமே அறிவிப்புகளாக இருந்தது. அவை செயல்படுத்தப்படவில்லை.திட்டங்களை செயல்படுத்தாமல் பெயரிட்டதற்காக மு.க.ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என தெரிவித்தார். 

முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின், வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டிற்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையிலான தேர்தல் என குறிப்பிட்டு வருகிறார். இதனைப் பற்றி பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்த தேர்தல் மாநில சட்டமன்றத்திற்குட்பட்டது. தேசிய அளவிலான போட்டி கிடையாது என தெரிவித்தார். 

மேலும் திமுக ஆட்சியின் கீழ் தமிழ்நாடு போராட்டங்களின் மையமாக மாறிவிட்டது. ஆளும் கட்சி உயிர்வாழ்வதற்காக கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்துள்ளது. அந்த கட்சியின் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் திமுக தலைமைக்கு  அடிமைகள் போல செயல்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கடன் வாங்குவதில் மட்டுமே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக மாறியுள்ளது என்றும், திமுக அரசின் கீழ் நடந்த ஊழல் காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் கடன் கிட்டத்தட்ட 5 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். 

திமுகவை தோற்கடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அதிமுக கூட்டணி இணைந்துள்ளது. நிச்சயம் திமுக ஆட்சியை அகற்ற மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அதிமுக தலைமையிலான கூட்டணியை பூஜ்ஜிய கூட்டணி என சொல்கிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தான் ஜீரோவாக மாறும் எனவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget