மேலும் அறிய

மேல்மருவத்தூர் அடிகளார் மனைவி சொத்து ரூ.250 கோடியா? வேட்பு மனுவில் ‛அடேங்கப்பா...’ விபரம்!

மேல்மருத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அடிகளாரின் மனைவி லட்சுமி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு அக்.,6ம் தேதியும், தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு அக்.,9ம் தேதியும் தேர்தல் நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி துவங்கி நேற்று வரை நடைபெற்றது. மேல்மருவத்தூர் அடிகளார் மனைவி சொத்து ரூ.250 கோடியா? வேட்பு மனுவில் ‛அடேங்கப்பா...’ விபரம்!
 
பொதுவாக ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் கட்சிகள் தங்களின் அடிமட்ட பலத்தை அதிகரிக்கும் வகையில் தனியாக நிற்பது வழக்கம். அதேபோல் ஒவ்வொரு ஊரிலும் புகழ்பெற்று விளங்கும் நபர்கள், பிரபலங்கள் தனித்து சுயேட்சையாக போட்டியிடுவதும் வழக்கம். அந்த வகையில் மேல்மருத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அடிகளாரின் மனைவி லட்சுமி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். 
 
மேல்மருவத்தூர்
 
செங்கல்பட்டு மாவட்டம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது மேல்மருவத்தூர். இங்குள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடம்தான் இந்த ஊரின் அடையாளமாக தெரிவித்து வருகிறது. தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் இங்கு வருகிறார்கள். அதிக வருமானம் உள்ளதால், ஆதிபராசக்தி அறக்கட்டளை மூலமாக மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, சி.பி.எஸ்.இ பள்ளிகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை இயங்குகின்றன.
மேல்மருவத்தூர் அடிகளார் மனைவி சொத்து ரூ.250 கோடியா? வேட்பு மனுவில் ‛அடேங்கப்பா...’ விபரம்!
இந்தக் கோயிலுக்கு குடியரசுத்தலைவர், முதலமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், நீதிபதிகள் , தமிழகத்தை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இக்கோவிலுக்கு வர தவறியது கிடையாது. இக்கோயிலை சுற்றி வட்டார ஊர்களில், உள்ள பகுதிகளில் இயங்கி வரும் கடைகளில் ஆதிபராசக்தி புகைப்படத்தை தாராளமாக காணலாம்.   அதேபோல் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் மேல்மருவத்தூர் கோயிலை சார்ந்தவர்கள் இல்லாமல் நடைப்பெறுவது கிடையாது. அப்பகுதியில் பங்காரு அடிகளார் மற்றும் அவரது மகன்களான அன்பழகன் செந்தில் ஆகியோர் செல்வாக்கு மிக்கவர்களாக திகழ்ந்து வருகின்றனர்.
 
உள்ளாட்சித் தேர்தலில் போட்டி
 
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக, பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் மாற்று வேட்பாளராக பங்காரு அடிகளாரின் மகன் செந்தில்குமாரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
மேல்மருவத்தூர் அடிகளார் மனைவி சொத்து ரூ.250 கோடியா? வேட்பு மனுவில் ‛அடேங்கப்பா...’ விபரம்!
முன்னதாக போட்டியிடும் லட்சுமி இதற்கு முன் 2  முறை மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேல்மருத்தூர் ஊராட்சி தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட காரணத்தினால், போட்டியிட முடியாத சூழல் உருவானது. மீண்டும் இந்த ஊராட்சி பொதுத் தொகுதியாக மாற்றி உள்ளதால், போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை வேட்புமனுத்தாக்கல் வேறு யாரும் செய்யாத காரணத்தினால்,  போட்டியின்றி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளர். 
 
சொத்து மதிப்பில் குழப்பம்

மேல்மருவத்தூர் அடிகளார் மனைவி சொத்து ரூ.250 கோடியா? வேட்பு மனுவில் ‛அடேங்கப்பா...’ விபரம்!
 
கடந்த 16ஆம் தேதி பங்காரு அடிகளாரின் மனைவி தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது மொத்த சொத்து மதிப்பு அசையும் சொத்துக்கள் -  75,149,141 , அசையா சொத்துக்களின் மதிப்பு - 160,280,003 , இதன் கூட்டுத்தொகை 23,54,29,144 வருகிறது.  ஆனால் வேட்பு மனுவில் ,  அதற்கு பதிலாக 253,54,29,144 என தவறாக குறிப்பிடப்பட்டது. இதன் காரணமாக சமூக வலைத்தளத்தில் 250 கோடி ரூபாய் சொத்து மதிப்பு என பரவத்துவங்கியது. இதுதொடர்பாக மேல்மருவத்தூர் வட்டாரங்கள் இச்செய்தியை மறுத்து வந்தனர்.
மேல்மருவத்தூர் அடிகளார் மனைவி சொத்து ரூ.250 கோடியா? வேட்பு மனுவில் ‛அடேங்கப்பா...’ விபரம்!
 
இதனைத் தொடர்ந்து 20 ஆம் தேதி லஷ்மி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். தனது அசையும் சொத்துக்களின் மதிப்பு 95,495,146 அசையா சொத்துக்களின் மதிப்பு 160,280,003 என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தனது சொத்து மதிப்பு 25,57,75,149 எனக் குறிப்பிட்டுள்ளார். 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Donald Trump: தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Donald Trump: தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
Pongal Holidays: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பு
Pongal Holidays: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பு
Tim David: RCBடா! பிக்பாஷ் லீக்கில் பொளந்து கட்டிய டிம் டேவிட்! IPL-க்கு ட்ரெயிலரா?
Tim David: RCBடா! பிக்பாஷ் லீக்கில் பொளந்து கட்டிய டிம் டேவிட்! IPL-க்கு ட்ரெயிலரா?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
Embed widget