மேலும் அறிய

Chennai Metro Free Travel: சென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவசமாக பயணிக்கலாம்.! சூப்பர் அறிவிப்பு- யாருக்கெல்லாம் தெரியுமா.?

Chennai Metro Free Travel: சென்னையில் பல்வேறு முக்கிய இடங்களை இணைக்கும் மெட்ரோ ரயில் சேவையானது இன்று நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று இலவசமாக பயணிப்பதற்கான வாய்ப்பையும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் சேவை பெரிதும் உதவியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பது மட்டுமில்லாம் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிப்பது தொடர்பான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அந்த வகையில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து, (பிப்ரவரி 26, 2026) இன்று சென்னை சேப்பாக்கத்தில் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ICC ஆண்கள் T20 உலகக்கோப்பை 2026-ன் சூப்பர் 8 ஆட்டத்தில் இந்தியா Vs ஜிம்பாப்வே கிரிக்கெட் போட்டியைப் பார்வையிட வருபவர்களுக்கு தடையற்ற போக்குவரத்தை வழங்குவதற்காக மெட்ரோ இரயில் சேவையை நீட்டித்துள்ளது.

சென்னையில் கிரிக்கெட் போட்டி- மெட்ரோ இலவச பயணம்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கிரிக்கெட் போட்டிக்கான பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மெட்ரோ பயணங்களை ஸ்பான்சர் செய்கிறது. எனவே கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டை பயன்படுத்தி போட்டி நடைபெறும் நாளில் பயணிகள் எந்த மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்தும் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்கு இடையிலான சுற்று பயணத்தினை மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

எனவே கிரிக்கெட் போட்டிக்கான டிஜிட்டல் நுழைவு பயணச்சீட்டுகளில் உள்ள தனித்துவமான OR குறியீடுகளை பயன்படுத்தி மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம் என கூறியுள்ளது. எனவே கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் ( பிப்ரவரி 26, 2026) இன்று ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுளது. 

மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

  • அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையம் வரை செல்லும் கடைசி மெட்ரோ இரயில் நள்ளிரவு 12 மணிக்கும் (12am-27.02.2026).
  • வழித்தடம் 1-ல் (நீலவழித்தடம்) விமான நிலைய மெட்ரோ இரயில் நிலையம் வரை செல்லும் கடைசி இரயில் நள்ளிரவு 12 மணிக்கும் (12am-27.02.2026),
  • சிறப்பு மெட்ரோ இரயில் சேவை நடைபெறும் காலத்தில் (அதாவது இரவு 11:00 மணிக்குப் பின்பு). வழித்தடம் 2-ல் (பச்சை வழித்தடம்) உள்ள மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் டாக்டர். எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் மட்டுமே மாறி செல்ல இயலும்.

எனவே பயணிகள் கடைசி இரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மெட்ரோ இரயில் நிலையத்திற்கு வருவதற்கு முன்பே, பயணிகள் தங்களது பயணச்சீட்டுகளை (Tickets) அந்தந்த மொபைல் செயலி அல்லது இணையதளம் மூலமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தமிழ் மீது மோடி வைத்திருக்கும் மரியாதையே தனி..! ஆனா.. மத்திய அரசு இப்படி செய்யலாமா.? சீறிய இபிஎஸ்
தமிழ் மீது மோடி வைத்திருக்கும் மரியாதையே தனி..! ஆனா.. மத்திய அரசு இப்படி செய்யலாமா.? சீறிய இபிஎஸ்
காஞ்சிபுரம் காவல் நிலையம்: மரங்களை நேசிக்கும் புதிய கட்டடம்! காவலர்களுக்குக் கிடைத்த கௌரவம்!
காஞ்சிபுரம் காவல் நிலையம்: மரங்களை நேசிக்கும் புதிய கட்டடம்! காவலர்களுக்குக் கிடைத்த கௌரவம்!
MRF factory at Sivagangai : சிவகங்கை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.5,300 கோடி முதலீட்டில் MRF தொழிற்சாலை- அசத்தல் அறிவிப்பு
சிவகங்கை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.5,300 கோடி முதலீட்டில் MRF தொழிற்சாலை- அசத்தல் அறிவிப்பு
Rajya Sabha election : திமுக, அதிமுகவில் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்.? யாருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.?
திமுக, அதிமுகவில் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்.? யாருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: விவசாயத்தை பற்றி தெரியாது... ஆனால் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி தெரியும்: அதிரடித்த விஜய்
விவசாயத்தை பற்றி தெரியாது... ஆனால் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி தெரியும்: அதிரடித்த விஜய்
Rajya Sabha election : திமுக, அதிமுகவில் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்.? யாருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.?
திமுக, அதிமுகவில் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்.? யாருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.?
TVK Thanjavur Meeting: மனைவி சங்கீதாவை வைத்து விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த தொண்டர்கள்!
TVK Thanjavur Meeting: மனைவி சங்கீதாவை வைத்து விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த தொண்டர்கள்!
TVK Vijay: ’’கரூர் டூ ஜனநாயகன்; என்னைச் சுற்றி இத்தனை விஷயங்களில் சதி நடக்கிறது’’- மவுனம் கலைத்த விஜய்!
TVK Vijay: ’’கரூர் டூ ஜனநாயகன்; என்னைச் சுற்றி இத்தனை விஷயங்களில் சதி நடக்கிறது’’- மவுனம் கலைத்த விஜய்!
சுயமரியாதையை சீண்டிப் பார்ப்பதா... தமிழர்களின் சூட்டை பாஜக உணர வேண்டிருக்கும்- எச்சரிக்கும் ஸ்டாலின்
சுயமரியாதையை சீண்டிப் பார்ப்பதா... தமிழர்களின் சூட்டை பாஜக உணர வேண்டிருக்கும்- எச்சரிக்கும் ஸ்டாலின்
TVK Vijay Election Promise: பயிர்க்கடன் தள்ளுபடி முதல் படிப்பு செலவு வரை; விஜய் அள்ளிக்கொடுத்த வாக்குறுதிகள் என்னென்ன.?
பயிர்க்கடன் தள்ளுபடி முதல் படிப்பு செலவு வரை; விஜய் அள்ளிக்கொடுத்த வாக்குறுதிகள் என்னென்ன.?
TVK Vijay Election Promise: மருத்துவம், பொறியியல் வரை இலவச கல்வி முதல் கடன் தள்ளுபடி வரை- விஜய்யின் அதிரடி வாக்குறுதிகள்!
TVK Vijay Election Promise: மருத்துவம், பொறியியல் வரை இலவச கல்வி முதல் கடன் தள்ளுபடி வரை- விஜய்யின் அதிரடி வாக்குறுதிகள்!
Kidney Disease Symptoms: சைலன்ட்டாக சம்பவம் செய்யும் கிட்னி நோய்; இந்த அறிகுறிகள் இருந்தா அசால்ட்டா இருந்துடாதீங்க
சைலன்ட்டாக சம்பவம் செய்யும் கிட்னி நோய்; இந்த அறிகுறிகள் இருந்தா அசால்ட்டா இருந்துடாதீங்க
Embed widget